Home :: News archive

News

27-06-2018
ராஜீவ் காந்தி சாலை - நாவல் - விநாயக முருகன்

 

ராஜீவ் காந்தி சாலை


விநாயக முருகன் - ரூ320/-

 

சென்னை நகரைச் சுற்றிலும் இயற்கை எழிலுடன் விளங்கிய கிராமங்கள் நகரமயமாதலின் காரணமாக இன்று சிதிலமாகிக்கொண்டிருக்கின்றன இயற்கை வளமான பிரதேசத்தின் ஊடே மாமல்லபுரத்தினை நோக்கிச் செல்லும் ராஜீவ் காந்தி சாலை வெறுமனே போக்குவரத்திற்கானது மட்டுமல்ல.

பாரம்பரியமான கிராமங்கள், ஐ.டி. கம்பெனிகள் என இரு வேறு உலகங்களைப் பிரிக்கும் எல்லையாக ராஜீவ் காந்தி சாலை விளங்குகிறது. பன்னாட்டுத் தகவல்தொடர்புக் கம்பெனிகளின் வருகையினால் செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற பாரம்பரியமான கிராமங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்வைத்து விநாய முருகன் எழுதியுள்ள ராஜீவ் காந்தி சாலை அண்மையில் தமிழுக்கு வந்துள்ள முக்கியமான நாவலாகும்.

- நன்றி தி இந்து தமிழ்.


 விநாயக முருகனின் மற்ற புத்தகங்கள்

                         
 ரூ.150/-                   ரூ.310/-                    ரூ.320/-

மேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818 / 9445901234

  

 

25-06-2018
பால புரஷ்கார், யுவ புரஷ்கார் விருது- 2018

 

பால புரஷ்கார், யுவ புரஷ்கார் விருது-- 2018


 

அம்புப் படுக்கை - சுனில் கிருஷ்ணன்

 

 
 
 

 
 
 
 
 மேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 

044-49595818 / 9445901234

 

03-05-2018
மனிதனை இயக்குவது மனமா மூளையா?

 

மனிதனை இயக்குவது மனமா மூளையா?


டாக்டர் A.V. ஸ்ரீனிவாசன் - ரூ.125/-

யோகாசனம், தியானம், பக்தி போன்றவை மனித மூளை, மனம் ஆகியவற்றில் ஏற்படுத்தும் மாறுதல்களை அறிவியல் அடிப்படையில் விளக்கும் நூல் இது.

உதாரணமாக சிலவற்றைச் சொல்லலாம். 
"கம்ப்யூட்டர் உதவியுடன் மனித மூளையின் ஒவ்வொரு பகுதியிலும் மின் அலை அளவுகளை உடனடியாகக் கணக்கிடலாம். அதன்மூலம், அவருக்கு ஏற்பட்டு இருக்கும் பிரச்னைகளையும் எளிதில் அறியலாம். ஒருவர் கண்களை மூடி பிரார்த்தனை செய்வது போல் இருக்கும்போது இந்த ஆல்ஃபா மின் அலைகள் ஏற்படுகின்றன.

கண்களைத் திறந்து அவரது கவனம் திசை திரும்பும்போது, உடனே பீட்டா மின் அலைகள் தோன்றிவிடுகின்றன. ஆண்டாண்டு காலமாக
முனிவர் முதல் ரமணர் வரை எல்லாரும் பழகச் சொன்ன தியானம்தான் இந்த ஆல்ஃபா நிலை.

"ஓம் எனும் மந்திரம் உலகின் அனைத்து மந்திரங்களின் ஒலிகளையும் உள்ளடக்கியது. இதற்கு ஓர் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு குழுவில் சிலரை "ஓம்' எனும் ஒலியை ஒலிக்கச் செய்தார்கள். சிலரை "ஸ்ஸ்' என்று ஒலிக்கச் செய்தார்கள்.  "ஸ்ஸ்' எனும் ஒலி ஒலித்தவர்களின் மூளையில் எந்தவிதத் தாக்கமும் இல்லை. ஆனால் "ஓம்' என்று ஒலித்தவர்களின் மூளையில் அமைதிக்கான இடம் உங்கள் எதிர்காலம் தூண்டப்பட்டிருந்தது அறியப்பட்டது."

நவீனயுகத்தில் அதற்குரிய கல்வி, தொழில் என வாழும் ஒருவர், ஆன்மீக பழக்க, வழக்கங்களைக் கடைப்பிடிப்பது அறிவியலுக்குப் புறம்பானதல்ல என்று நிறுவும் நூல்.

- நன்றி தின மணி.

புத்தகத்தை ஆர்டர் செய்ய: 

http://www.nhm.in/shop/Manidanai_Iyakkuvathu_Manama_Moolaiya.html

 

 

26-04-2018
உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும் சுஜாதா விருதுகள் 2018

 

2018 - சுஜாதா விருது பெற்ற நூல்கள்

ஆன்லைனில் வாங்க:

                                                                         
                  கவிதை விருது 2018                                       கவிதை விருது 2018    
                          காயா - ரூ.120/-                                                  திருமார்புவல்லி - ரூ.50/-

                                                                          
              கட்டுரை விருது 2018                                         கட்டுரை விருது 2018
 எட்வர்ட் செய்த்தும் கீழைத்தேய இயலும் - ரூ.150/-               சுந்தர ராமசாமி கருத்தும் கலையும் - ரூ.250/-

   
சிறுகதை விருது 2018 
                                                       கண்ணாடி - ரூ.120/-                                                        

                                                                    
                நாவல் விருது 2018                                            நாவல் விருது 2018
                       பேட்டை -ரூ.390/-                                                      பெயல் - ரூ.180/-
                                                          

  மேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 

044-49595818 / 9445901234

 

 

24-04-2018
உயிர்காக்கும் உணவு மருத்துவம்


அ.மெய்யப்பன், ரூ.230/-

புத்தகத்தின் உள்ளே..

• ஆரோக்கியத்தின் அடையாளங்கள் ! 
• நோயற்று வாழ 5 வழிகள் ! 
• தேங்காய், வாழை, சாத்துக்குடி, எலுமிச்சை, | மாம்பழம் ஆகியவற்றின்       அருமை பெருமைகள் 
• மலச்சிக்கல் நீக்கும் உப்புச்சுவை, காரச்சுவை உணவுகள் 
• ஆரோக்கியம் தரும் கீரைகள் 
• நாளுக்கொரு மூலிகைச் சாறு 
• இரத்தத்தில் காரச்சத்து 80 சதவீதம் அமிலச்சத்து 20 சதவீதம் 
• உங்கள் உணவு எப்போது? என்ன? எப்படி? 
• ஆனந்தமும், ஆரோக்கியமும் தரும் அடுப்பில்லா உணவுச் செயல்முறைக் குறிப்புகள். 
• உப்பு, பால் இவற்றின் குணங்கள். 
• புலாலை ஏன் தவிர்க்க வேண்டும்?
• காலை உணவு, சாறுள்ள பழங்கள் அல்லது கூழ். 
• இரவு உணவு 7 மணிக்குள்
 
இன்னும் பல தகவல்களைக் கொண்டுள்ளது இந்நூல்.
 
புத்தகத்தை ஆர்டர் செய்ய:  https://www.nhm.in/shop/Uyirkakkum_Unavu_Maruthuvam.html
 

தொடர்புடைய புத்தகங்கள்

                  
ரூ.220/-                         ரூ.120/-                         ரூ.175/-

 

மேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818 / 9445901234
 

 

 

17-04-2018
அமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்


தொல். திருமாவளவன், ரூ.325.00

தலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.
 
உழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.
 
- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்
 

புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்ய: https://www.nhm.in/shop/Amaippai_Thiralvom.html

தொடர்புடைய புத்தகம்

க. திருநாவுக்கரசு, ரூ.1200.00

புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்ய: https://www.nhm.in/shop/1000000017726.html
 
 
மேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818
 

11-04-2018
காவிரி அரசியலும் வரலாறும்


ஆர். முத்துக்குமார், ரூ 175

இரு நூற்றாண்டுப் பிரச்னை தீராமல் இருப்பதற்குக் காரணமான அரை நூற்றாண்டு அரசியலை விவாதிக்கும் முக்கியமான பதிவு!

சட்டத்தை மதிக்காத கர்நாடக அரசுகள், ஒற்றுமைக்குரலை ஓங்கி ஒலிக்காத தமிழக அரசியல் கட்சிகள், ஆதாய அரசியலுக்கு அடிபணிந்து போகும் மத்திய அரசுகள், சாதகமற்ற இயற்கை அமைப்பு என்ற நான்முனைத் தாக்குதலின் ஒருங்கிணைந்த வடிவமே காவிரிப் பிரச்னை.
 
இன்றுவரை கொந்தளிக்கும் உணர்வுபூர்வமான ஒரு பெரும் சிக்கலாக, அரசாங்கங்களால் மட்டுமல்ல நீதிமன்றங்களாலும் தீர்க்கமுடியாத ஒரு பெரும் முரண்பாடாக, எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் காத்திருக்கும் ஒரு வெடிகுண்டாக காவிரி வளர்ந்து நிற்பது ஏன்? தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையிலான முதல் மோதல் எப்போது வெடித்தது? இந்த மோதலைத் தீர்க்க இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்னென்ன? அவை ஏன் வெற்றி பெறவில்லை?
 
ஆர். முத்துக்குமாரின் இந்தப் புத்தகம் காவிரி நதிநீர் சிக்கல் குறித்த ஒரு தெளிவான சித்திரத்தை அளிப்பதோடு சிக்கலோடு தொடர்புடைய சமூக, வரலாற்றுப் பின்னணியையும் நடுநிலையோடு ஆராய்கிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள்; மத்தியில் இந்திரா காந்தி தொடங்கி மோடி வரையிலான பிரதமர்களின் அணுகுமுறை; கர்நாடகத் தலைவர்கள் முன்னெடுத்த அரசியல்; காவிரி தீர்ப்பாயத்தை முன்வைத்து நீதிமன்றத்திலும் வெளியிலும் நடைபெற்ற விவாதங்கள் என்று பல்வேறு கோணங்களில் இருந்து காவிரியை ஆராய்கிறது இந்நூல்.
 
எம்.ஜி.ஆர் காலத்தில் எழுந்து அடங்கிய மேகாதாட்டூ தடுப்பணை விவகாரம் தற்போது மீண்டும் வேகமெடுத்திருக்கும் விதம் தனி அத்தியாயமாகவே தரப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை பற்றியும் மோடி அரசின் ஒற்றைத் தீர்ப்பாய யோசனையின் அபாயம் பற்றியும் கோடிகாட்டுகிறது இந்தப் புத்தகம்.
 
‘மொழிப்போர்’, ‘கச்சத்தீவு’, ‘மதுவிலக்கு’ வரிசையில் ஆர். முத்துக்குமாரின் முக்கியமான புத்தகம் இது!
 
ஆர்டர் செய்ய: http://www.nhm.in/shop/9788184937190.html
 


வழக்கறிஞர் C. P. சரவணன், ரூ 170

புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்ய: http://www.nhm.in/shop/1000000026546.html

போன் மூலம் ஆர்டர் செய்ய: 044-49595818

வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

 

09-04-2018
இந்தியாவின் இருண்ட காலம்

சசி தரூர் எழுதிய புதிய புத்தகம் - இந்தியாவின் இருண்ட காலம். 
விலை ரூ 350/-

தினமணி நாளிதழில் இந்நூல் குறித்து வெளியான புத்தக அறிமுகம்:

முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சமஸ்தானங்களாகச் சிதறுண்டு கிடந்த பல பகுதிகளை பிரிட்டிஷார் எளிதாகக் கைப்பற்ற முடிந்தது. கைப்பற்றிய பகுதிகளின் பொருளாதாரத்தைச் சுரண்டி, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்தினர்.
 
இந்திய பருத்தியைக் கைப்பற்றிக் கொண்டு சென்று, முழுமை அடைந்த உடைகளாகத் திரும்பவும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்தனர். ரயில் போக்குவரத்து வந்த பிறகு இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் இருந்த உபரிகள் சுரண்டப்பட்டன. நகர்ப்புற பெரும் வணிகர்கள், ஏற்றுமதியாளர்களுடன் இந்திய விவசாயிகள் போட்டியிடும் நிலை ஏற்பட்டது.
 
இந்தியாவில் பிரிட்டிஷார் தங்களுக்காகவே தேயிலையை வளர்த்தார்கள். டார்ஜிலிங் தேயிலை, அசாம் தேயிலை, நீலகிரித் தேயிலை எல்லாம் ஸ்காட்லாந்து முதலாளிகளால் பயிரிடப்பட்டன.
 
இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சியை பிரிட்டிஷார் அழித்தது, பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டங்களை, எதிர்ப்புகளை பல்வேறு சட்டங்கள் மூலம் ஒடுக்கியது, 1866 ஒரிசா பஞ்சத்தில் மொத்தம் 15 லட்சம் பேர் பட்டினியால் இறந்தநிலையில், சுமார் 10 கோடி கிலோ அரிசியை (20 கோடி பவுண்டு) பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்தது, மத, இன வேற்றுமைகளைத் தூண்டிவிட்டு மக்களிடையே வெறுப்பை வளர்த்தது, பிரிட்டிஷாரின் நலன்களுக்கு உகந்த கல்விமுறையைத் திணித்தது என பிரிட்டிஷ் ஆட்சியாளரின் செயல்களை எல்லாம் மிக விரிவாக அலசி ஆராய்கிறது இந்நூல்.
நன்றி: தினமணி, 5/3/2018.
 
 
புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்ய: http://www.nhm.in/shop/Indiavin_Irunda_Kaalam.html
 
போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 04449595818
 
வாட்ஸப்பில் ஆர்டர் செய்யவும் தொடர்புகொள்ளவும் - 9500045609

தொடர்புடைய புத்தகங்கள்: 
 


R
s. 300


Rs. 325

 

Rs. 190

 


Rs.600
 

 

06-04-2018
ஆ.ராசாவின் புதிய புத்தகம் - 2ஜி அவிழும் உண்மைகள்

ஆ. ராசா எழுதிய புதிய புத்தகம் - 2ஜி அவிழும் உண்மைகள்.

விலை: ரூ 200

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/2_G_Avizhum_Unmaikal.html

போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ்: 04449595818

 


 

---

தொடர்புடைய புத்தகங்கள்: 

                 

09-12-2017
பா. ராகவனின் புதிய புத்தகங்கள் - சலுகை விலையில் முன்பதிவு
ஜனவரி 2018 சென்னை புத்தகக் காட்சியில் பா.ராகவனின் மூன்று நூல்கள் கிழக்கு பதிப்பகம் வழியாக வெளியாகிறது.
 
1. பூனைக்கதை - புதிய நாவல்
 
 
2. ருசியியல் - தி இந்துவில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு
 
 
3. சிமிழ்க்கடல் - பா.ராகவன் எழுதிய எட்டு நாவல்களின் (அலை உறங்கும் கடல், அலகிலா விளையாட்டு, புவியிலோரிடம், ரெண்டு, கொசு, கால் கிலோ காதல் அரை கிலோ கனவு, தூணிலும் இருப்பான், மெல்லினம்) பெருந்தொகுப்பு.
 
 
இந்த மூன்று நூல்களின் மொத்த விலை ரூ. 1,500. 
 
இதற்கு கிழக்கு பதிப்பகம் சலுகை விலையில் முன்வெளியீட்டுத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
 
டிசம்பர் 25ம் தேதிக்குள் இவற்றுக்கு முன்பதிவு செய்தால் விலை ரூ. 1,000 மட்டும். பதிவு செய்வோருக்கு ஜனவரி 7-10 தேதிகளுக்குள் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.
 
மூன்று நூல்களையும் தனித்தனியாகவும் முன்பதிவு செய்யலாம்.
 
பூனைக்கதை நாவல் ரூ. 350. முன் வெளியீட்டுத் திட்டத்தில் இதன் விலை ரூ. 250 மட்டும்.
 
சிமிழ்க்கடல் பெருந்தொகுதியின் விலை ரூ. 1,000. முன் வெளியீட்டுத் திட்டத்தில் இதனை ரூ. 750க்குப் பெறலாம்.
 
ருசியியல் ரூ. 150. இது முன் வெளியீட்டுத் திட்டத்தில் ரூ. 100க்குக் கிடைக்கும்.
 
முன்பதிவு செய்வதற்கான சுட்டிகள்:
 
சிமிழ்க்கடல், பூனைக்கதை, ருசியியல் (Combo Pack): https://www.nhm.in/shop/ChimizhKadal_PoonaiKathai_Rusiyiyal_Combo_Pack_Pre_Order.html
 
 
சிமிழ்க்கடல்: https://www.nhm.in/shop/ChimizhKadal_Pre_Order.html
 
 
முன்பதிவு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு nhm-shop@nhm.in என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
 
போன் மூலம் ஆர்டர் செய்வதாக இருந்தால், டயல் ஃபார் புக்ஸ் 94459 01234 என்ற எண்ணை அழைக்கவும். (இந்த எண்ணை அழைக்கும்போது, தங்கள் அழைப்பு மாற்றப்பட்டு டயல் ஃபார் புக்ஸின் பதிவுசெய்யப்பட்ட குரல் கேட்கும் வரை இணைப்பைத் துண்டிக்காமல் காத்திருக்கவும்.)
01-06-2016
Chennai book fair 2016 - Stall Number 642-649
2016ம் ஆண்டுக்கான சென்னை புத்தகக் கண்காட்சி வரும் ஜூன் 1 முதல் ஜூன் 13 வரை, சென்னை தீவுத்திடலில் வைத்து நடைபெற உள்ளது.
 
வேலை நாள்களில் மதியம் 2 மணி முதல் 9 மணி வரையும் விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தகக் கண்காட்சி நடைபெறும். 
 
கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டால் எண்: 642 - 649.
 
கிழக்கு பதிப்பகம் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு புதிய நூல்களைப் பதிப்பிட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 
2015 மற்றும் 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகங்களின் பட்டியலைப் பார்க்க இங்கே செல்லவும்: https://www.nhm.in/pdf/2015and2016.pdf
 
புத்தகக் கண்காட்சிக்கு அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.
 
தொடர்புக்கு: 95000 45608


Subscribe

*
Type the characters you see in the picture:


*