Home :: Authors :: Crazy Mohan

Crazy Mohan

பிறந்து, வளர்ந்து, படித்ததெல்லாம் சென்னை என்றாலும், கிரேஸி மோகனின் பூர்வீகம் கும்பகோணம். பொறியியல் படித்துவிட்டு, சுந்தரம் க்ளேய்ட்டனில் பத்தாண்டுகள் பணியாற்றி இருந்தாலும், அக்னிக் குஞ்சு மாதிரி மனத்துக்குள் நாடகக் கனவுகள் விடாது சுட்டுக்கொண்டிருந்ததால், வேலையை விட்டுவிட்டு 1985ல் முழுநேர எழுத்தாளர் ஆனார். ஆனந்த விகடன் பத்திரிகையில் ஓரிரு வருடங்கள் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம், கிரேஸி மோகனுக்கு வெகுஜன ரசனையை மிக நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவியிருக்கிறது. இதுவரை 25 நாடகங்களுக்கும் 35 திரைப்படங்களுக்கும் கதை, வசனம் எழுதியிருக்கிறார். மோகனின் நாடகங்கள் சுமார் பத்தாயிரம் முறை மேடையேறி இருக்கின்றன. தமிழக அரசின் சிறந்த மேடைநாடகக் குழு' விருது, தேவன் நினைவு விருது போன்றவை கிரேஸி மோகனின் எழுத்துக்குக் கிடைத்திருக்கும் கௌரவங்கள்.

Products

     
அமெரிக்காவில் கிச்சா
கே.பி.டி.  சிரிப்புராஜ சோழன்
மிஸ்டர் சிச்சா
அமெரிக்காவில் கிச்சா கே.பி.டி. சிரிப்புராஜ சோழன் மிஸ்டர் சிச்சா
₹ 130
₹ 215
₹ 100
Quantity
Quantity
Quantity