Home :: வெண்முரசு :: கிராதம் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)
கிராதம் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

கிராதம் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9788184938098
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் கெட்டி அட்டை
பதிப்பாண்டு 2017
மொழி Tamil
Our price: 1300.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



வேதங்கள் உருவாவதற்கு முந்தைய காலங்களை கனவுகளாகவும், உருவகங்களாகவும் முன்வைக்கிறது கிராதம். வருணனை முதல் தேவனாகக் கொண்ட தொல்வேதகாலம் முதல் இந்திரனை முதல் தெய்வமாகக்கொண்ட வேதம் எழுவதுவரையிலான காலம், நாராயணனை முதல்தெய்வமாகக் கொண்ட நாராயணவேதம் எழும் தொடக்கம் இதிலுள்ளது.

அதை அர்ஜுனனின் பயணங்களாக இது சித்தரிக்கிறது. வேதமுதல்வனிடமிருந்து பாசுபதவேதத்தை அர்ஜுனன் பெறும்போது நிறைவடைகிறது. பாண்டவர்களில் அர்ஜுனனுக்கே கீதை உரைக்கப்பட்டது. அவனே வில் வழியாக யோகியானவன். இந்நாவலில் வருவது நாராயணவேதத்தின் உச்சத்தைக் கேட்கும் இடம் நோக்கி அவன் செல்லும் பயணமும்கூட. வேதம் எங்கிருந்தெல்லாம் ஊறியிருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எண்ணுகிறார்களோ அங்கெல்லாம் அவன் பயணம் நிகழ்கிறது. ஆளுமையின் அனைத்து வடிவங்களிலும் அமைந்து அறிந்து அவன் மீள்வதே இதன் கதை.

உலகக் காப்பியவரலாற்றில் மாவீரர்களின் பயணங்களை மெய்ஞானப் பயணங்களாகச் சித்தரிப்பது பொதுவான வழக்கம். ஒருபக்கம் எளிய வீரகதையாகவும் மறுபக்கம் அகப்பயணமாகவும் தோன்றும் ஒரு கதையாடல் தொன்மைக்காலம் முதலே இங்கு இருந்துள்ளது. அந்த காவியப்போக்கு கொண்ட நாவல் இது.

கிராதம் - வெண்முரசு நாவல் வரிசையின் பன்னிரண்டாவது நாவல்.

ஜெயமோகன் மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுதி வருகிறார். அதன் பன்னிரண்டாவது நூல் இது.

இந்த செம்பதிப்பில் 60 வண்ண ஓவிய படங்கள் உண்டு.

இதை நீங்கள் விபிபியில் ஆர்டர் செய்யமுடியாது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 140.00
₹ 50.00
₹ 50.00
வீட்டுக்கொரு மருத்துவர் பருப்புகள் ஆவி உலகம்
 
₹ 55.00
₹ 220.00
₹ 120.00
5 வாரங்களில் இந்தி கற்றுக் கொள்ளுங்கள் ஸ்ரீ நாலாயிர திவ்யப்பிரபந்தம் இரண்டாயிரம் தமிழில் 3D STUDIO MAX ''7 '' கற்றுக் கொள்ளுங்கள்
 
₹ 270.00
₹ 40.00
₹ 35.00
சீனா: கம்யூனிஸ்ட் முதலாளி தேர்வுசெல்லும் மாணவர்களுக்கு அறிஞர் பெர்னாட்ஷா
: *
: *
: *
 
There have been no reviews