Home :: இலக்கியம் :: ஓரிதழ்ப்பூ
ஓரிதழ்ப்பூ

ஓரிதழ்ப்பூ

நூலாசிரியர் அய்யனார் விஸ்வநாத்
ஐ எஸ் பி என் 9789386737311
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
மொழி Tamil
Our price: 150.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



யதார்த்தம், புனைவு மற்றும் மிகுபுனைவு ஆகிய மூன்று தளங்களையும்  ஓரிதழ்ப்பூவின் கதைவெளி உள்ளடக்கி இருக்கிறது. இக்கதாபாத்திரங்கள் மிகவும் தனித்தன்மையான சிக்கல்களைக் கொண்டிருக்கிறார்கள். இந் நாவல் உருவாக்கும் மாயவெளியில் வாசகர்கள் தங்களை முற்றிலும் கரைத்துக் கொள்ள முடியும். வாசிக்கும் போதே தரையில் கால் நழுவும் அனுபவத்தைத் தரக் கூடிய அய்யனார் விஸ்வநாத்தின் எழுத்து, ஒவ்வொருவரின் நிகழையும் பலவந்தமாய் பிடுங்கி கனவில் எறிகிறது. இப் புனைவின் புதிர் வெளியெங்கிலும் ஓராயிரம் இதழ்கள் கொண்டப் பூக்கள் ஒரே நேரத்தில் பூக்க ஆரம்பிக்கின்றன. வாசகராய் உள்நுழையும் எவரும் இக் கனவு வெளியில் தொலையாமல் மீளும் சாத்தியங்கள் மிகக் குறைவு.
 
***
 
திருவண்ணாமலையை சொந்த ஊராகக் கொண்ட அய்யனார் விஸ்வநாத்தின் ஆறாவது புத்தகம் இது. கவிதை சிறுகதை நாவல் எனப் புனைவுத் தளத்திலும் சினிமாக் கட்டுரைகள் என அ-புனைவுத் தளத்திலும் இயங்குபவர். கடந்த பத்து வருடங்களாக துபாயில் வசிக்கிறார். மலையாள சினிமா மற்றும் உலகளாவிய மாற்று சினிமாக்களில் இவரது பங்களிப்பு இருக்கிறது. ஓரிதழ்ப்பூவை திருவண்ணாமலை ட்ரிலாஜியின் இரண்டாவது 
நாவல் என்கிறார். முதல் நாவலான இருபது வெள்ளைக்காரர்கள் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றது. ஒரு தசாம்சத்திற்கும் மேலாக இணையத்தில் தொடர்ந்து இயங்கி வருபவர். திரளான இணைய வாசகர்களைப் பெற்றிருக்கிறார்.
கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 250.00
₹ 110.00
பதிற்றுப்பத்து ஐங்குறுநூறு சில அவதானிப்புகள் கண்ணன் வருவான் Microsoft Access எனும் தரவுதள மேலாண்மை - ஓர் எளிய அறிமுகம்
 
₹ 50.00
₹ 90.00
₹ 275.00
தமிழ் தென்றல் திரு.வி.க. செம்மை நெல் சாகுபடி தமிழ்த் திரைப்படமும் பண்பாட்டு அரசியலும்
 
₹ 120.00
₹ 50.00
₹ 40.00
அந்த மாலை மயக்கம் உன் கைகளே மூலதனம் வெற்றிக்கு விசா
: *
: *
: *
 
There have been no reviews