Home :: அரசியல் :: லீ குவான் யூ
லீ குவான் யூ

லீ குவான் யூ

நூலாசிரியர் S.L.V. மூர்த்தி
ஐ எஸ் பி என் 9789384149826
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2016
Our price: 250.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



"பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி படிப்படியாக ஒரு பிரமாண்டமான ராஜ்ஜியத்தைக் கட்டி முடித்த ஒரு கதாநாயகனின் கதை இது.

முதல் முறையாக பிரதமராக லீ குவான் யூ பதவியேற்றபோது சிங்கப்பூரில் அடிப்படை கட்டுமானம்கூட இல்லை. பெரும்பாலான மக்கள் குடிசைகளில்தான் வசித்து வந்தார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்தது. நோய்கள், திருட்டுகள், குற்றங்கள் பெருகிக்கொண்டிருந்தன.

இன்று சிங்கப்பூர் ஒரு சொர்க்கபுரியாக மாறியிருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் லீ குவான் யூ. அவநம்பிக்கை, தயக்கம், அச்சம் அனைத்தையும் நகர்த்தி வைத்துவிட்டு சிங்கப்பூரைக் கட்டியமைக்கத் தொடங்கினார் லீ.

தரமான கல்வி, நல்ல வாழ்க்கைத் தரம், வலுவான பொருளாதாரம், ஊழலற்ற அமைப்பு, ஒழுங்கு, தூய்மை என உலகத்துக்கே ஒரு முன்மாதிரி நாடாக சிங்கப்பூரைக் கட்டமைத்தார் லீ.

அவருடைய மன உறுதி, தொலைநோக்குப் பார்வை, திட்டமிடும் திறன், ஆளுமைப் பண்புகள், ராஜதந்திரம் ஆகியவற்றை சிங்கப்பூர் மட்டுமல்ல, உலகமே வியந்து இன்று பாராட்டுகிறது.

மக்கள் நலனில் அக்கறைகொண்ட ஒரு தலைவரிடம் முழுமையான அதிகாரம் கிடைத்தால் ஒரு நாட்டை எப்படி முன்னேற்றமுடியும் என்பதற்கு லீ குவான் யூ ஒரு தலைசிறந்த உதாரணம்.

லீ குவான் யூவின் அசாதாரணமான வாழ்க்கையை நவீன சிங்கப்பூரின் வரலாற்றோடு சேர்த்து சுவைபட எழுதியிருக்கிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி. தினமணி.காமில் வெளிவந்த தொடரின் செழுமைப்படுத்தப்பட்ட வடிவம் இது.

ஒரு வலுவான, வளமான தேசத்தை உருவாக்கவேண்டும் என்று கனவு காணும் அனைவரும் அவசியம் வாசிக்கவேண்டிய ஒரு நூல்."

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 150.00
₹ 70.00
₹ 245.00
அத்தனைக்கும் ஆசைப்படு! தன் முயற்சி விடுதலைத் தழும்புகள்
 
₹ 60.00
₹ 48.00
₹ 125.00
முக்கால் கிரவுண்ட் (1800 ச. அ. ) வீடுகளுக்கான நவீன வாஸ்து வரை படங்கள் அடிமனத்தின் சுவடுகள் இசை என்கிற மருத்துவர்
 
₹ 250.00
₹ 120.00
₹ 275.00
பரிமேலழகன் பாபாசாகேப் அம்பேத்கரின் பெளத்த ஆக்கங்கள் சிலிர்ப்பு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)
: *
: *
: *
 
There have been no reviews