
வெஜ் பேலியோ
உடற்பயிற்சிக்கு நேரமோ, விருப்பமோ இல்லை. ஆனால் ஏறிய எடையைக் குறைத்தே தீரவேண்டும். என்ன செய்யலாம்?
வெஜ் பேலியோ அதற்குக் கைகொடுத்ததாகச் சொல்லும் பாரா, ஒன்றரை ஆண்டுக் காலத்தில் இருபத்தியெட்டு கிலோ எடையை இதில் குறைத்திருக்கிறார்.
பேலியோ உணவு முறைக்கு மாறியபின் தனது உடல் ஆரோக்கியத்தில் நிகழ்ந்த வியக்கத்தக்க மாற்றங்களை இந்நூலில் பகிர்ந்துகொள்கிறார் பாரா. பேலியோ என்றாலே அசைவம்தான். ஆனால் அதில் சைவமும் சாத்தியம் என்று பரீட்சை செய்து வென்றவரின் அனுபவத் தொகுப்பு இது.