Home :: சிறுகதைகள் :: பான் கி மூனின் றுவாண்டா
Delay in shipping - There may be some unexpected delay in the shipping and customer support as the publishers are busy with Chennai book fair 2018. Sorry for the inconvenience caused to you. Thanks for your co-operation.
பான் கி மூனின் றுவாண்டா
பான் கி மூனின் றுவாண்டா

Author அகரமுதல்வன்
ISBN 9788184938210
Published by Kizhakku
Book Title Ban Ki Moonin Rwanda
Format PB
Year Published 2017
Author name Akaramuthalvan
Language Tamil
Our price: 120.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


’பான் கீ மூனின் றுவாண்டா’ எனும் இந்த வாக்கியமே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பற்றிய உலக மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்வினை. இவ்வையகம் எனக்குத் தருவித்த குரூரமான அவலம் முனைமழுங்க மறுக்கும் விநோதமான கத்தி மாதிரி எனது அகதி அட்டையோடு இருக்கிறது. எனது வார்த்தைகளும், கதையின் மாந்தர்களும் உலகைப் பழிவாங்கத் துடிக்கும் நீதியின் முதற்குழந்தைகள். கைவிடப்பட்டும், கொல்லப்பட்டும் அநீதியான முறையில் நிர்வாணமாக்கப்பட்ட நந்திக்கடல் மனிதர்களே இந்த நூற்றாண்டைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இனிவருகிற எல்லா நூற்றாண்டிலும் நீதியின் பிராணவாயுவாக தமிழீழர்களே எழுச்சி கொள்ளப்போகிறார்கள். அவர்களின் இலக்கியங்களே உலகைப் பேரலையாகத் தாக்கப் போகிறது. அந்தப் பேரலையின் ரகசியச் சுழிப்பும், அதிர்வுமே எனது கதைகள்.

***

அகரமுதல்வன் தமிழீழத்தின் வடபகுதியில் உள்ள ‘பளை’ எனும் ஊரில் 1992ல் பிறந்தார். ‘தொடரும் நினைவுகள்’, ‘அத்தருணத்தில் பகை வீழத்தி’, ‘அறம் வெல்லும் அஞ்சற்க’, ‘டாங்கிகளில் சரியும் முல்லை நிலா’ ஆகிய நான்கு கவிதைத் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. இணையத்தில் கலை, இலக்கியம், அரசியல் தொடர்பான கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கும் இவர், நிகழ்த்துக் கலைக் கலைஞன் ஆவார். இவரது ‘அத்தருணத்தில் பகைவீழ்த்தி’ கவிதைத் தொகுப்பு ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது’ மற்றும் ‘கலகம் விருது’ ஆகியவற்றைப் பெற்றுள்ளது. இவர் பத்து ஆளுமைகளுடன் நடத்திய நேர்காணல் தொகுப்பான ‘நன்றேது? தீதேது?’ வெகுவாகக் கவனிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ‘இரண்டாம் லெப்ரினன்ட்’, ‘முஸ்தபாவைச் சுட்டுக்-கொன்ற ஓரிரவு’ என்கிற சிறுகதைத் தொகுப்புக்களைத் தொடர்ந்து மூன்றாவதாக வெளிவரும் சிறுகதைத் தொகுப்பே ‘பான் கீ மூனின் றுவாண்டா.’ சென்னை புத்தகத் திருவிழா - 2017ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருதினை இவரின் ‘முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு’ சிறுகதைத் தொகுப்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

₹ 45.00
₹ 40.00
₹ 160.00
கம்பனும் கண்ணதாசனும் நம்மை அறிவோம்! நிறைவாய் வாழ்வோம்! ரஸ்யாவின் ரஸ்புடீன் தீர்க்க தரிசியா?மக்கள் புரட்சிக்கு வித்திட்டவரா
 
₹ 40.00
₹ 140.00
₹ 40.00
நீரின்றி அமையாது உலகு டாப் 100 அறிவியல் மனிதர்கள் வர்மக்கலை ரகசியம் (படங்களுடன்)
 
₹ 90.00
₹ 150.00
₹ 80.00
எழுத்தென்னும் நிழலடியில் ஸ்ரீமத் பகவத் கீதை (மூலம் தமிழில் பெரிய எழுத்தில் - பாராயணத்திற்கு உரியது) தங்க திரிசூலம்
: *
: *
: *
 
There have been no reviews