
ஆகஸ்ட் தியாகி அப்புசாமி
தீபாவளி ஸ்வீட் பாக்ஸுக்காக அல்லாடுகிறார். சுதந்தரப் போராட்ட காலத்துக்குச் சென்று அந்நியத் துணிகளை எரிக்கிறேன் பேர்வழி என்று சீதாப்பாட்டியின் துணிகளை எரித்துவிட்டு மாட்டிக்கொண்டு திண்டாடுகிறார். தேர்தலில் சீதாப்பாட்டியைத் தோற்கடிக்க, கடத்தல் வேலைகளில் ஈடுபட்டு உதைவாங்குகிறார். அம்மனுக்குக் கூழ் காய்ச்சுவதற்காகப் பணம் கேட்டு வருபவர்களிடம் வம்பு செய்து மூக்கை உடைத்துக்கொள்கிறார்.
சில கதைகளில் சீதாப்பாட்டியும் தொல்லைகளுக்கு ஆட்படுகிறாள். ஆனால் கடைசியில் எப்போதும்போல, ஜெயிப்பது அவளே, தோற்பது இவரே.
பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி கதைகளில் சிரிப்புக்குப் பஞ்சமே இல்லை.
பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி கதைகளில் சிரிப்புக்குப் பஞ்சமே இல்லை.