Home :: கட்டுரைகள் :: உரையாடும் காந்தி
உரையாடும் காந்தி

உரையாடும் காந்தி

நூலாசிரியர் ஜெயமோகன்
பதிப்பகம் தன்னறம்
கட்டுமானம் சாதா அட்டை (PB)
பதிப்பாண்டு 2018
மொழி Tamil
Our price: 300.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ஒரு நூலகத்தில் காந்தியின் தொகுக்கப்பட்ட நூல்களை பார்ப்பவர் எவரும் துணுக்குறுவார்கள். இந்தியாவில் எந்த ஒரு எழுத்தாளரும் கற்பனைசெய்யக்கூட முடியாத அளவுக்கு எழுதிக்குவித்திருக்கிறார் காந்தி. அரசியல்கட்டுரைகள், அறிக்கைகள்,கடிதங்கள் என. அவற்றில் அரசியல் மட்டுமல்ல மருத்துவம் முதல் பொருளியல் வரை அனேகமாக நவீன வாழ்க்கையின் எல்லா தளங்களையும் தொட்டுச் சென்றிருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் மகத்தான உள்ளங்களில் ஒன்று காந்தி. காந்தி இடைவிடாது உரையாடிக்கொண்டே இருந்தார். பல்வேறு தளங்களில் பலதரப்பட்டவர்களுடன். அந்த உரையாடல் வழியாக அவர் கற்பித்தார், கற்றுக்கொள்ளவும் செய்தார். இந்த இரண்டாவது அம்சம்தான் விந்தையானது. மார்க்சியம் பற்றி பியாரிலாலுக்கும் காந்திக்கும் இடையிலான உரையாடலை வாசித்தபோது எண்ணிக்கொண்டேன், காந்தி இவ்வகையில்தான் கற்றுக்கொள்ள முடியும் என. அவர் வாசகர் அல்ல, ஆனால் பேரறிஞர். காந்தியின் காதுகள் மிகப்பெரியவை, அவை கேட்கும் வல்லமை மிக்க யானையின் காதுகள். ஜே.சி.குமரப்பா முதல் வெரியர் எல்வின் வரை அவருடைய அத்தனை மாணவர்களும் அவருக்குக் கற்பித்தவர்களும்கூட. காந்தியைப்பற்றி அறிவதற்கும் உகந்த முறை உரையாடுவதுதான். காந்தியை தன் கைகளால் விவசாயம் செய்யும் ஒருவர் புரிந்துகொள்ள முடியும். ஓர் அரசியல்நிலைபாட்டாளர் புரிந்துகொள்ள முடியாது வெவ்வேறு தளங்களில் காந்திபற்றிய உரையாடல்களை நான் நிகழ்த்தினேன். உரைகள், கேள்விபதில்கள், குறிப்புகள் என. அவற்றின் தொகுதி இது காந்திக்குச் செல்லும் பாதையை இந்நூல் தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்.

- ஜெயமோகன்


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 125.00
₹ 110.00
₹ 180.00
நாடார் வரலாறு குற்றம் புதிது ஆபத்தானவர்கள்
 
₹ 85.00
₹ 399.00
₹ 110.00
அன்னை வயல் நான் செய்வதைச் செய்கிறேன் பிசினஸ் மகா மகாராஜாக்கள்
 
₹ 70.00
₹ 65.00
₹ 50.00
தம்பியர் இருவர் இதயத்தை ஈரமாக்கும் இதிகாச கதைகள் ஞானியர் பூமி ( ஒற்றியூர் தல வரலாறு )
: *
: *
: *
 
There have been no reviews