Home :: இலக்கியம் :: மகாபாரதம்
மகாபாரதம்

மகாபாரதம்

நூலாசிரியர் திருமுருக கிருபானந்த வாரியார்
பதிப்பகம் குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 245.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



நம்முடைய பண்டைய இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரதமும் மிகச் சிறந்த நீதியைக் கூறும் நூல்கள். ஒவ்வொரு தருமத்தையும் விரித்துக் கூறுவது புராணம். அநேக அறங்களை உணர்த்துவது இதிகாசம். மகாபாரதத்தில் அடங்காத அறமே இல்லை என்று கூறுவர் முன்னோர்.

வியாச முனிவர் கூற, விநாயகப் பெருமானே தன் திருக்கரங்களால் எழுதிய இதிகாசம் மகாபாரதம் என்பதால், இதன் பெருமையை விரித்துரைப்பது யாராலும் இயலாத ஒன்று. பறவைகள் வந்து ஆலமரத்தில் தங்குவது போல, அநேக அறநெறிகள் உறையும் கற்பகத்தரு மகாபாரதம் என்பதை அருணகிரிநாதரே ஒரு திருப்புகழில் கூறியுள்ளார்.

மகாபாரதத்தில் இருந்து இந்துக்களுக்குக் கிடைத்த மிகச்சிறந்த வேதம்தான் கிருஷ்ண பரமாத்மா அருளிய பகவத்கீதை. மனிதன் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது? என்னும் தத்துவத்தினை பலருடைய கதாபாத்திரங்களின் வாயிலாக விளக்குகிறது மகாபாரதம். நம்ப முடியாத பல சம்பவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தினாலும், அந்தச் சம்பவங்களின் மூலம் மக்களுக்கு அறிவுறுத்தக்கூடிய நீதிநெறிகள் பலவும் மகாபாரதத்தில் உள்ளன.

எந்தவொரு காப்பியத்தையும், இதிகாசத்தையும், புராணத்தையும், சைவசித்தாந்தத்தையும் பாமரருக்கும் விளங்கக்கூடிய வகையில் அவற்றை அப்படியே சாறுபிழிந்து சுருங்கச் சொல்லி சிலகதைப்பின்னல்களோடு விளங்கவைக்கக்கூடியவர் வாரியார் சுவாமிகள். மகாபாரதம் ஓர் அருமையான இதிகாசம் என்பதைவிட, அருமையான மொழிநடையில் அதைக் கொண்டு சென்றுள்ள வாரியாரின் பதிவு அற்புதம் எனலாம்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 90.00
₹ 110.00
ஊடகங்களின் ஊடாக - ஊடகவியல் கட்டுரைகள் மனம் திரும்புதே வியக்க வைக்கும் உண்மை நிகழ்வுகள்
 
₹ 75.00
₹ 80.00
₹ 200.00
ஒரு தாயின் அனுபவ மருத்துவக் குறிப்புகள் கோபயாஷி தலாய் லாமாவின் சொற்பொழிவுகள்
 
₹ 60.00
₹ 90.00
₹ 50.00
யானுமிட்ட தீ செவ்வாய்க்கு மறுநாள், ஆனால் புதன்கிழமை அல்ல உயிரின் தோற்றம்
: *
: *
: *
 
There have been no reviews