குழந்தைக் கவிஞர் பாடல் பரம்பரை
குழந்தை இலக்கியத்திற்கு அரிய சேவை செய்தவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பன். குழந்தைகளை நல்வழிப்படுத்த அவர் எழுதிய பாடல்கள் ஏராளம்.
பூஞ்சோலை உள்பட சில பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்து பணிபுரிந்தவர். அழ. வள்ளியப்பாவைப் பின்பற்றி கவிஞர்கள் ஆனவர்கள் ஏராளம். அவர்கள் குழந்தைக் கவிஞர் பாடல் பரம்பரை என்று அழைக்கப்படுகிறார்கள்.
அந்தப் பரம்பரையைச் சேர்ந்த கவிஞர்களிடம், ஆளுக்கு ஒரு கவிதை பெற்று, இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 16 கவிதைகள் இதில் உள்ளன. குழந்தைக் கவிஞர் காட்டிய வழியில் இந்தக் கவிதைகள் கருத்தாழத்துடன் எழுதப்பட்டுள்ளன.
தொகுப்பாசிரியர்களான பி. வெங்கட்ராமன், நீரை. அத்திப்பூ ஆகியோர் மிகவும் சிரமப்பட்டு இந்தக் கவிதைகளைத் திரட்டி, நூலை சிறந்த முறையில் தயாரித்துள்ளனர்.
நன்றி: தினத்தந்தி, 11/12/13.