Home :: திரைப்படம் :: ரஜினி ஒரு சரித்திரத்தின் சரித்திரம்
ரஜினி ஒரு சரித்திரத்தின் சரித்திரம்

ரஜினி ஒரு சரித்திரத்தின் சரித்திரம்

நூலாசிரியர் பா.தீனதயாளன்
பதிப்பகம் மதி நிலையம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
Our price: 275.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



‘திருடியிருக்கான். சினிமா பார்க்கத்தான். பளீர் பளீர்னு அடி வாங்கி இருக்கான். பெல்ட்டினாலதான். சிவாஜி ஏறிக் குதிக்காத சுவர் இல்ல. போதை ஏறக் குடிக்காத சாராயமில்ல. அவன் என்ன செய்யல?’.

உள்ளதை உள்ளபடி பேசுவதுதான் ரஜினியின் இயல்பு. எந்த உயரத்துக்குச் சென்றாலும் தரையில் கால் பதித்து நடக்கும் எளிமைதான் அவரது வெற்றியின் ரகசியம். சிவாஜி ராவ் என்ற சாதாரணன், தன்னிகரற்ற சூப்பர் ஸ்டாராக விஸ்வரூபமெடுத்தது சாகச சரித்திரம். சூப்பர் ஸ்டாரான ரஜினி, ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்து வருவது விநோத விசித்திரம்.

எண்பது ஆண்டு கால கலை உலக வரலாற்றில், ரஜினியைப்போல் முழுக்க நசுக்கப்பட்டும், நாடாளும் தகுதி உடையவராக உயர்ந்தவர் யாரும் கிடையாது. தனக்கான அரியணையில் அடுத்தவர்களை அமரவைத்துப் பார்க்கும் பற்றற்றவர். முதுகில் குத்தியபோதும் தன் இதயத்தை வானம்போல் திறந்துவைத்தவர் ரஜினி. உலகம் அவரைப் பைத்தியக்காரன் என்றது. அதே உலகம்தான் அவரது ஒவ்வொரு துளி வியர்வைக்கும் கோடிகளைக் கொட்டிக் கொடுக்கக் காலமெல்லாம் காத்திருக்கிறது.

சிவாஜி ராவ் என்ற மனிதனின் பிரமாண்டத்தையும், ரஜினி என்ற உச்ச நட்சத்திரத்தின் சறுக்கல்களையும் பாரபட்சமின்றி, அரிய புகைப்படங்களுடன் பதிவு செய்திருக்கிறது இந்நூல். ஸ்பீட், ஸ்டைல் - இவ்விரண்டும் ரஜினியின் பலம். நூலாசிரியர் பா. தீனதயாளனின் எழுத்தும் அப்படியே.

இது ரஜினி என்ற கோலிவுட் கடவுளின் வாழ்க்கை மட்டுமல்ல; கடந்த மூன்று தலைமுறைக்கான தமிழ் சினிமா வரலாறு.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 175.00
₹ 310.00
₹ 60.00
வட்டத்துள் யயாதி இரண்டு பாகங்கள் சமுதாய வீதி
 
₹ 20.00
₹ 40.00
₹ 50.00
கல்நெஞ்சன் மிக மிக எளிய பரிகாரங்கள் 3 மடலேறிய ஓவியம்
 
₹ 50.00
₹ 800.00
₹ 130.00
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஜெருசலேம் கண்ணகி
: *
: *
: *
 
There have been no reviews