Home :: சுய முன்னேற்றம் :: நீ நதி போல ஓடிக்கொண்டிரு
நீ நதி போல ஓடிக்கொண்டிரு

நீ நதி போல ஓடிக்கொண்டிரு

நூலாசிரியர் பாரதி பாஸ்கர்
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 80.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



பெண்களின் கனவுகளும் முன்னேற்றங்களும் சமுதாயத்தில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும், பெண்களின் மனம் படும் பாடு, அவர்களுடைய எதிர்பார்ப்புகள், ஏக்கம், தாகம் இவை கவனிக்கப்படாதபோது எழும் நியாயமான கோபம் ஆகியவற்றையும் கவனித்து, ஆராய்ந்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர் பாரதி பாஸ்கர்.

பெண்களின் முன்னேற்றத்தில் பங்கு கொள்ளாத ஆண்களின் மனோபாவம், பெண்களை பெண்களே தவறாகப் புரிந்து கொள்வது, ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண்ணே எதிரி ஆகும் நிலையைச் சமாளிப்பது -இப்படி ஒவ்வொரு உணர்வையும் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நூல்.

பெண்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாத ஆணாதிக்க சமுதாயம், வீட்டில் மட்டுமல்ல... பொது இடங்களிலும், மேடைகளிலும், அலுவலகங்களிலும், பயணங்களிலும் பெண்களை மட்டம்தட்டி, அவர்களை முன்னேறவிடாமல் குறுக்கே நின்று கட்டியிருக்கும் அணைகளை உடைத்து வீறுகொண்டு நடைபோடும் நதியாக மாறுவது எப்படி என்பதை எழுச்சியான நடையில் வழிகாட்டுகிறார் நூலாசிரியர்.

கணவன், மாமியார், நாத்தனார் பிரச்னைகளை அன்பால் சமாளிக்கும் வித்தைகளையும், குழந்தைகள் வளர்ப்பில் பெண்ணுக்கு இருக்கும் பொறுப்புகளையும், மனைவியாக குடும்பத்தில் நுழைந்தவுடன் அந்தக் குடும்பத்தினர் மீது காட்டவேண்டிய அக்கறையையும் உணர்த்தி, கரைகளை உடைக்காமல் அமைதியான நதி போல ஓடுவது எப்படி என்பதை மிகவும் நெகிழ்ச்சியாக மனம் கவரும்படி வர்ணித்திருக்கிறார்.

அவள் விகடன் இதழ்களில் வெளிவந்த நீ நதி போல ஓடிக்கொண்டிரு...


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 125.00
₹ 70.00
குடும்ப ரகசியங்கள் கோடம்பாக்கத்தில் அறுபது ஆண்டுகள் வடதேச யாத்திரையும் பன்னிரு ஜோதிர்லிங்கமும்
 
₹ 80.00
₹ 450.00
₹ 75.00
நந்தா விளக்கு மீண்டு நிலைத்த நிழல்கள் சிலப்பதிகார ரசனை
 
₹ 40.00
₹ 60.00
₹ 70.00
ஸ்ரீ கருட புராணம் வெற்றி உங்களிடமே தெய்வீகக் களஞ்சியம்
: *
: *
: *
 
There have been no reviews