Home :: பொது :: தமிழ் இனி 2000 (இருபதாம் நூற்றாண்டு உலகத் தமிழ் இலக்கிய வரலாறு)
தமிழ் இனி 2000 (இருபதாம் நூற்றாண்டு உலகத் தமிழ் இலக்கிய வரலாறு)

தமிழ் இனி 2000 (இருபதாம் நூற்றாண்டு உலகத் தமிழ் இலக்கிய வரலாறு)

நூலாசிரியர் Kalachuvadu Pathippagam
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் கெட்டி அட்டை
Our price: 750.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.இருபதாம் நூற்றாண்டில் தமிழ் ஒரு பன்னாட்டு மொழியாக, நவீன மொழியாக, பரந்து வளர்ந்து நிற்பதைத் தொகுத்துக் கணித்த மாபெரும் மாநாடு தமிழ் இனி 2000 எந்த அரசு ஆதரவுமின்றி உலகத் தமிழ்ச் சமூகத்தின் உதவியை மட்டுமே கொண்டு நிகழ்ந்த இந்த மாநாடு, நடந்து முடிந்த பிறகும் நம்ப முடியாத அதிசயம்.

அடூர் கோபாலகிருஷ்ணனின் துவக்கவுரை, பேராசிரியர் கா.சிவத்தம்பி, சுந்தர ராமசாமி ஆகியோரின் சிறப்புரைகளோடு கூடிய தொடக்கம்.

தமிழகம், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகள் எனத் தமிழர் குடிமக்களாகவும் புலம் பெயர்ந்தோராகவும் வாழும் பல்வேறு நாடுகளிலுமிருந்து வந்த நவீன எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள், ஆய்வாளர்கள், இதழாளர்கள், பேராசிரியர்கள், பல்துறை வல்லுநர்கள், வாசகர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் பங்கேற்பு-கருத்தரங்கோடு ஓவியக் கண்காட்சி, புத்தக விற்பனை அரங்குகள், நாடகங்கள், தன்னியலான கலந்துரையாடல்கள் எனப் பெருவிழாவாக விரிந்த பிரம்மாண்டத்தின் சாரமாக - கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், முதலிய வடிவங்கள்... அறிவியல் புனைகதைகள், குழந்தை இலக்கியம், எதிர்ப்பிலக்கியம் முதலிய உள்ளடக்கங்கள்...தேசியம், திராவிடம், மார்க்சியம், தலித்தியம் முதலிய இரசங்கள்...இதழியலும் இலக்கியமும், திரை இலக்கியம், இணையத்தமிழ் முதலிய ஊடகங்கள்...மொழிநடை, மொழிபெயர்ப்பு, கணினித் தமிழ் முதலிய மொழி நிலைகள் என வகைமை வளம் சான்ற அடிப்படைகளில் கணக்கெடுப்புகளாகவும் பன்முகக் கணிப்புகளாகவும் அரங்கில் முன்வைக்கப்பெற்ற ஏறத்தாழ நூறு கட்டுரை, கருத்துரைகளின் தேர்ந்து செப்பம் செய்யப்பெற்ற 1000பக்க அளவிலான தொகுப்பு இந்நூல்.

மாநாடு பற்றிய திட்டமிடல், பல்வேறு கட்டச் செயல்பாடுகள், மாநாட்டு நிகழ்வு, மாநாடு பற்றிய கருத்துப் பதிவுகள், மாநாட்டு நிகழ்ச்சிகள் பலவற்றைக் கட்புலனாக்கும் வண்ணப் புகைப்படங்கள் ஆகியன நூறு பக்கங்களில் பின் இணைப்புகளாகத் தரப்பட்டுள்ளன.

தமிழ் இனி 2000 நிகழ்ந்த காலத்திற்கும் களத்திற்கும் மீள அழைத்துச் செல்லும் வகையில், டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்ட 70 நிமிடக் குறுந்தகடு (CD) ஒன்று இத்துடன் வழங்கப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கியம் - அதாவது நவீனத் தமிழிலக்கியம் பற்றி இந்த அளவிலும் தரத்திலும் இதுவரை எந்தத் தொகுப்பும் வெளிவந்ததில்லை.

இது உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 150.00
₹ 290.00
₹ 130.00
மறவர் சீமை- ஒரு பாதிரியாரின் பார்வையில் உடையார் பாகம் 5 மறுவார்த்தை பேசாதே
 
₹ 45.00
₹ 300.00
₹ 85.00
கரடியுடன் ஒரு கம்பு விளையாட்டு பொது மொழியியல் கட்டுரை மலர்கள்
 
₹ 70.00
₹ 190.00
₹ 40.00
அற்புதமான 1001 இரவு அரபுக் கதைகள் திராவிட நாட்டுக் கல்வி வரலாறு கிரஹங்களின்படி திருமணப்பொருத்தம் மற்றும் மனையடி சாஸ்திரம்
: *
: *
: *
 
There have been no reviews