Home :: வெண்முரசு :: சொல்வளர்காடு - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)
சொல்வளர்காடு - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

சொல்வளர்காடு - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9788184937305
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் கெட்டி அட்டை
பதிப்பாண்டு 2017
Our price: 1200.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



சொல்வளர்காடு - வெண்முரசு நாவல் வரிசையில் பதினொன்றாவது நாவல்.

மெய்ம்மையைத் தேடுவதே தன் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர் தருமன். அவருடைய விழிகளினூடாக வேதம்வளர்ந்த காடுகளை ஒற்றைக் கதைப்பரப்பாக இணைக்கிறது இந்நாவல். நேரடியாக தத்துவ, மெய்ஞான விவாதங்களுக்குள் செல்லவில்லை. கதைகளையே முன்வைக்கிறது. அனேகமாக அத்தனை கதைகளுமே கூறுமுறையில் வளர்ச்சியும் மாற்றமும் அடைந்தவை. நவீன கதைசொல்லல் முறைப்படி மீள்வடிவு கொண்டவை. அக்கதைகள் உருவாக்கும் இடைவெளிகளை, அக்கதைகளின் இணைவுகள் உருவாக்கும் இடைவெளிகளைத் தன் கற்பனையாலும் எண்ணத்தாலும் வாசகன் நிரப்பிக்கொள்ளவேண்டும் எனக் கோருகிறது இந்நாவல்.

ஒன்றின் இடைவெளியில் இருந்து பிறிதொன்றைக் கண்டடைந்து நீளும் இதன் பாதை இந்திய மெய்ஞான மரபின் வளர்ச்சியின் தோற்றமும்கூட. ஆனால் தத்துவத்தை படிமங்கள் வழியாகவே இலக்கியம் பேசுகிறது. அந்த விவாதத்தை முழுமைசெய்ய வாசகனின் பங்களிப்பைக் கோருகிறது.

728 பக்கங்கள் கொண்ட நாவல் இது. 58 வண்ணப் புகைப்படங்களும் இந்நாவலில் உள்ளன.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 140.00
₹ 100.00
₹ 120.00
தென்னிந்திய வரலாறு II மன அழுத்தத்தைச் சமாளிக்க எளிய வழிகள் புறநானூறு அகராதி
 
₹ 400.00
₹ 120.00
₹ 60.00
வெள்ளையானை உங்கள் கனிவான கவனத்திற்கு ETA - ஓர் அறிமுகம்
 
₹ 310.00
₹ 110.00
₹ 55.00
வலம் மொழி நூல் என் வீடு
: *
: *
: *
 
There have been no reviews