
யுவான் சுவாங்
பதினாறு ஆண்டுகள் இந்தியாவில் தங்கிய யுவான் சுவாங் என்ன சாதித்தார்?
இந்தியாவையும் யுவான் சுவாங்கையும் இணைத்த புள்ளி, புத்தர். புத்த மதத்தின் சாரங்களைத் திரட்டுவதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் யுவான் சுவாங். சமஸ்கிருதத்தில் பவுத்த நூல்களைக் கற்கவும் அவற்றைத் தன்னுடைய தேசத்து மக்களுக்குப் பயன்படும்வகையில் சீன மொழிக்குக் கொண்டுசெல்வதும்தான் அவருடைய பயணத்தின் நோக்கமாக இருந்தது.
அதுமட்டுமில்லை, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அரசியல் தொடர்புகளும், இந்தக் காலகட்டத்தில்தான் உருவாகத் தொடங்கின. அத்தனைக்கும் தொடக்கப் புள்ளியாக அமைந்தது, யுவான் சுவாங்கின் பயணம்.
சுவாரசியமான இந்தப் பயணியின் வாழ்க்கையில் பயணம் செய்ய வாருங்கள்!