Home :: பொது அறிவு :: அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின
அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின

அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின

நூலாசிரியர் பெ.கருணாகரன்
பதிப்பகம் குன்றம் பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 45.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.சிங்க ராஜா, தந்திரம் செய்யும் நரி அதற்கு ஒத்தாசையாய் ஓநாய் என காலம் காலமாக சொல்லப்படும் “ஒரு ஊருல…” வகை கதைகள் குழந்தைப் பருவத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி, கற்பனைத் திறனை மேம்படுத்தி, அறிவாற்றலை செறிவாக்குபவை. ஆனால் பாட்டி காலம்தொட்டு இன்று வரை இந்தக் கதைகள் ஒரே மாதிரியான அமைப்புடனே வாழ்ந்து வந்திருக்கின்றன.

இன்றைக்கு யுடியூப்பில் விரும்பிய ரைம்ஸ் பாடலை, இடையே வரும் விளம்பரத்தை மவுஸை இயக்கி அகற்றி பார்க்க இரண்டு வயதிலேயே தெரிந்து வைத்திருக்கும் மழலைகளின் கற்கும் திறனுக்கு ஏற்றவாறு இந்தக் கதைகள் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கின்றனவா என்றால் பதில் சொல்வது கடினம்.

ஆனால் இப்பொழுது இந்தக் கேள்விக்கு நம்பிக்கையூட்டும் பதிலாக வந்திருக்கிறது குன்றம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் கதைத் தொகுப்பான ‘அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின?’ புத்தகம். இதனை பெ. கருணாகரன் திறம்பட எழுதியிருக்கிறார்.

இந்தப் புத்தகம் நெடுகிலும் அதே சிங்க ராஜா, தந்திர நரி, எலி, புலி எல்லாம் இருக்கின்றன. ஆனால் பொதுவான சிறுவர் நீதிக் கதைகளில் வருவதைப் போன்ற மரம் வளர்த்தலின் அவசியம், நீரின் தேவை, அழகிற்காக இயல்பினை இழக்காதிருத்தல், துணிவே துணை, உண்மையான மரியாதை போன்ற கருத்துகளைத் தாங்கிய கதைகள் மட்டும் அல்லாமல் அவற்றுடன் ஓசோன் ஓட்டை, தொழிற்சாலை கழிவு, வீடுகளாக மாறும் விளைநிலங்கள், ஜனநாயகம் என வளரும் தலைமுறையினர் அறியவேண்டிய நவீன கால தலைப்புகளை அலசும் கதைகளும் சொல்லப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் தனித்தன்மை.

அதற்காக கருத்து சொல்கிறேன் என்று மட்டும் இல்லாமல் ஜாலியான கிரியேட்டிவ் கதைகளும் ஆங்காங்கே உண்டு. தவளைக்கு அந்தக் குரல் எப்படி வந்தது என்பதையும் விலங்குகள் ஏன் ஆடை அணிவதில்லை என்பதையும் ஒரு நீதிக்கதையாக சுவையாக சொல்லும் அதே வேளை அமேசான் காடுகள், சஹாரா பாலைவனங்கள் எப்படித் தோன்றின என்கிற சுவாரஸ்ய கற்பனைக் கதையும் உண்டு.

மொத்தத்தில் இன்றைய குழந்தைகளுக்கு ஏற்ற சிறப்பான புத்தகம் தந்த ஆசிரியர் இன்னும் கொஞ்சம் விரிவான கதைகளுடன் அடுத்த நிலை சிறுவர்களுக்காக இன்னுமொரு புத்தகத்தை எதிர்பார்க்க வைக்கிறார்


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 18.00
₹ 140.00
₹ 85.00
நாட்டுக்கு உழைத்த நல்லவர் ராஜாராம் மோகன் ராய் சிலப்பதிகாரம் அகல்யா
 
₹ 55.00
₹ 80.00
₹ 40.00
மயிலம்மா: போராட்டமே வாழ்க்கை ஜக்கி வாசுதேவ் சொன்ன கதைகள் இனியவை எழுபது
 
₹ 50.00
₹ 155.00
₹ 70.00
நிலா வனம் மீசை என்பது வெறும் மயிர் வால்கள
: *
: *
: *
 
There have been no reviews