Home :: சமையல் :: கிச்சன் கிளினிக்
கிச்சன் கிளினிக்

கிச்சன் கிளினிக்

நூலாசிரியர் செஃப் ஜேக்கப்
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 90.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆனால், இன்றைய வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கமும் பலருக்கு இந்தக் குறைவற்ற செல்வம் கிடைக்காமல் செய்துவிடுகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் இல்லாத நாட்களே இல்லை என்பதே இன்றைய நிலை!

அலோபதி, ஹோமியோபதி மட்டுமல்ல எந்த மருத்துவ முறையானாலும் உணவுக் கட்டுப்பாடு என்று வரும்போது கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஆலோசனைகளையே மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதன் அடிப்படையில் மருந்தாகவும், ஆரோக்கியத்தின் ஆரம்பமாகவும் அமையக்கூடிய அற்புதமான சுவையான ரெஸிபிகளை இங்கே நமக்கு செய்முறைகளோடு விருந்தாக்கியுள்ளார் செஃப் ஜேக்கப்.

இது வெறும் சமையல் நூல் மட்டுமல்ல... அதிக அளவில் இன்று மக்களை வாட்டி எடுக்கும் நோய்களான உடல் பருமன், நீரிழிவு, வயிற்றுப்புண், சிறுநீரகக் கல் போன்றவை வரும்முன் காப்பதற்கான உணவு முறைகளைக் கூறும் சமையல் குறிப்பு நூல்.

நோய் பாதிப்புகளின் தன்மை, எந்தெந்த நோய்க்கு எந்தெந்த காய்கறிகள், தானியங்கள் சேர்த்துக்கொள்வது நல்லது என்பதுபோன்ற மருத்துவரீதியான ஆலோசனைகளை, டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி, இரைப்பை மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சைத் துறை மருத்துவர் சந்திரமோகன், சிறுநீரகத்துறை மருத்துவர் சௌந்தரராஜன், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்கள் துறை மருத்துவர் முகமது அலி, நுரையீரல் ஸ்பெஷலிஸ்ட் சங்கீதா, ஆர்த்தோபீடிக் சர்ஜன் முத்துக்குமார் போன்றவர்கள் வழங்கியுள்ளனர்.

ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத விருந்து!


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 210.00
₹ 200.00
₹ 375.00
கேஜிபி மெளனம் பேசுமா மிஸ்டர் வேதாந்தம்
 
₹ 55.00
₹ 40.00
₹ 90.00
அச்சம் அகற்றும் அருளாளர் ஷீரடி சாயிபாபா ஒரே உலகம் மணம் வீசும் மணிச்சொற்கள் (நபிமொழித் தொகுப்பு)
 
₹ 110.00
₹ 60.00
₹ 450.00
இதயம் இடம் மாறும் வந்துவிடு வெண்ணிலவே அறுபத்து மூவர்-நாயன்மார்கள் வரலாறு
: *
: *
: *
 
There have been no reviews