Thursday, April 30, 2009

கிழக்கு பதிப்பகம் சார்பில் உலகப் புத்தக தினக் கொண்டாட்டம்

உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு, சமஸ்தா பெண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு இலவசப் புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் வழங்கியது.

சமஸ்தா பெண்கள் சுய உதவிக்குழுவுடன் இணைந்து, திருவொற்றியூர் பகுதியில் உள்ள அதன் உறுப்பினர்களுக்கு கிழக்கு பதிப்பகம் இலவசப் புத்தகங்களை வழங்கியது. புத்தகங்களை ஆர்வமுடன் படித்த பெண்கள், தங்கள் வீட்டுக் குழந்தைகளிடம் புத்தகம் படிக்கும் வழக்கத்தினை வளர்க்க உறுதி மேற்கொண்டார்கள்.





கிழக்கு பதிப்பகத்தின் இயக்குநர் சத்யநாராயண் புத்தகங்களை வழங்கினார். ”புத்தகங்களின் மூலமாகவே நாம் அறிவை மக்களுக்குக் கொண்டு செல்லமுடியும். புத்தகம் படிக்கும் வழக்கத்தையும் பாரம்பரியத்தையும் நம் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்களுக்கும் ஏற்படுத்தவேண்டும்” என்றார்

Labels: ,

Wednesday, April 29, 2009

Kizhakku Pathippagam Provides Free Books to SHGs - The Hindu on 29-04-2009

Labels: ,

Thursday, April 2, 2009

கிழக்கு பதிப்பகத்தின் மொட்டைமாடி கூட்டம் 30-03-09










கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம், திங்கள் கிழமை, 30 மார்ச் 2009 அன்று மாலை 6.00 மணிக்கு நடந்தது.

அ.கி.வெங்கட சுப்ரமணியன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அலுவலர். தமிழகர் அரசின் பல துறைகளில் செயலராக இருந்துள்ளார். ஓய்வுக்குப்பின், உந்துநர் அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்திவருகிறார். அதன் சார்பாக குடிமக்கள் முரசு என்ற தமிழ் மாத இதழை நடத்திவருகிறார். கிராமங்கள் பலவற்றில் மக்கள் மன்றங்கள் என்ற அமைப்புகளை ஏற்படுத்தி, கிராம மக்களுக்கு குடியாட்சி முறையின் அடிப்படைகளைத் தெரியப்படுத்தி, எப்படி அவர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடலாம் என்று தெளிவுறுத்தி பேசினார்.

Labels: ,

Wednesday, April 1, 2009

கிழக்கு பதிப்பகம் சார்பில் நடைப்பெற்ற புத்தக கண்காட்சி - திருவல்லிக்கேனி








Labels: