Friday, December 28, 2007

Chennai Book Fair 2008 - New Horizon Media - INDIAN WRITING

Chennai book fair 2008 is going to be held at St. George Hr. Sec. School , Poonamallee High Road (Opposite to Pachaiyappa College) from Jan 4th to 17th.

Our english imprint, INDIAN WRITING books will be available at stall No. 162

Labels: , ,

சென்னை புத்தகக் கண்காட்சி 2008 - கிழக்கு பதிப்பகம்

சென்னை புத்தகக் கண்காட்சி 4-17 ஜனவரி 2008, பூந்தமல்லி நெடுங்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் பல்வேறு பதிப்புகள் கீழ்க்கண்ட அரங்குகளில் இருக்கும்.

1. கிழக்கு பதிப்பகம் (இலக்கியம் தவிர்த்து பிற புத்தகங்கள்) + நலம் வெளியீடு:
அரங்கு எண் P28

2. வரம் வெளியீடு: அரங்கு எண் 359, 360

3. ஆடியோ புத்தகம்: அரங்கு எண் 114
கிழக்கின் இலக்கியப் புத்தகங்கள் ‘விருட்சம்' அரங்கில் மட்டுமே கிடைக்கும்.
அரங்கு எண்: 378, 379

Labels: , ,

சென்னை புத்தகக் கண்காட்சி - தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - ஆடியோ வடிவில்


ஆடியோ புத்தகங்கள்: சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கு எண் : 114

தமிழில் உலகத்தரத்திலான எண்ணற்ற சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன் தொடங்கி இன்றுவரை பல எழுத்தாளர்கள், சிறுகதையின் பல சாத்தியங்களை முயன்று பார்த்துள்ளனர். தேர்ந்தெடுத்த பல எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த சில சிறுகதைகளை ஆடியோ வடிவில் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். குறைந்தது நூறு (100) சிறுகதை ஆசிரியர்கள்; ஆளுக்குப் பத்து சிறுகதைகளாவது, என்பது திட்டம்.

அதன் முதல்படியாக, பத்து சிறுகதை எழுத்தாளர்களது கதைகளை - தனித்தனியாக - ஆடியோ சிடி (எம்.பி.3 வடிவில்) கொடுத்துள்ளோம். முதல் பத்தில் வருபவர்கள்: புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, சா.கந்தசாமி, தேவன், அ.முத்துலிங்கம், இரா.முருகன், சுப்ரமண்ய ராஜு.

சிறுகதைகள் வாசிப்பது குறைந்து வரும் இந்த சமயத்தில், இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

Labels: , ,

Tuesday, December 25, 2007

கிழக்கு ஒலிப் புத்தகம் - ஜெயா ப்ளஸ் - 21.12.07


கிழக்கு ஒலிப்புத்தகம் பற்றிய செய்தித் தொகுப்பு ஜெயா ப்ளஸ்
தொலைக்காட்சியில் 21.12.07 அன்று ஒளிபரப்பானது.

Labels: , , , ,

Monday, December 17, 2007

கிழக்கு புத்தகங்களுக்கு "ப. ஜீவானந்தம் - பி. ராமமூர்த்தி நூற்றாண்டுவிழா கலை இலக்கியப் பரிசுகள்"

11.12.2007 - திருப்பூர்

திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம், DRG தமிழ்ச் சங்கம், திருப்பூர் கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய ப. ஜீவானந்தம் - பி. ராமமூர்த்தி நூற்றாண்டுவிழா கலை இலக்கியப் போட்டிகளில் இரண்டு கிழக்கு பதிப்பக நூல்களுக்குப் பரிசுகள் கிடைத்திருக்கின்றன.


முதல் பரிசு - க.சீ. சிவகுமாரின் சிறுகதைத் தொகுப்பு ‘என்றும் நன்மைகள்’.



பாராட்டுப் பரிசு - ஷாராஜின் சிறுகதைத் தொகுப்பு ‘வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு’.

Monday, December 3, 2007

Pennal Mattumae Mudiyum - The Hindu - Book Release Function