Friday, September 28, 2007

புரட்சியாளர்கள் - வாழ்வும் போராட்டமும்

அடக்குமுறை எப்போது எங்கே எந்த வடிவத்தில் நிகழ்ந்தாலும் அதை எதிர்த்துப் போராடவேண்டும். வா, வந்து போராடு. சரித்திரத்தை மாற்றி எழுதிய புரட்சியாளர்கள் அத்தனை பேரின் அறைகூவலும் இதுதான். உலகின் தலைசிறந்த புரட்சியாளர்களின் வாழ்வையும் போராட்டத்தையும் கிழக்கு பதிப்பகம் முறைப்படி பதிவு செய்துவருகிறது.

காரல் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, ஹியூகோ சாவேஸ், ஹோ சி மின், திப்பு சுல்தான், சுபாஷ் சந்திர போஸ், மார்ட்டின் லூதர் கிங் இவர்கள் வரிசையில் தற்போது வெளிவந்திருக்கும் முக்கிய நூல் பகத் சிங்.

Labels: ,

சுமங்கலி பூஜை - தமிழில் இது முதல்முறை

'காலங்காலமாக செவிவழியாகக் கேள்விப்பட்டே எங்கள் வீட்டில் இந்த பூஜையை செய்து வருகிறோம். இதற்கென ஒரு புத்தகம் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டுதலாக இருக்கும்' - ஆன்மிக சர்வே ஒன்றை எடுத்தபோது இப்படிச் சொன்னார்கள் பலரும்.

ஆகவே அற்புதமாக தமிழில் மலர்ந்திருக்கிறது இந்நூல்.

தஞ்சாவூர் வழிமுறை, நெல்லை மாவட்ட வழிமுறை, வட ஆற்காடு வழிமுறை... ஐயர், ஐயங்கார், மாத்வர்கள்,தெலுங்கர்கள், பாலக்காட்டு பிராமணர்கள் மற்றும் இந்த பூஜையை தங்கள் வீடுகளில் செய்ய விரும்பும் அத்தனை சமூகத்தினருக்குமான சிறப்புக் குறிப்புகளுடன் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டு, விறுவிறுப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது இந்நூல்.

Labels: ,

Thursday, September 27, 2007

புதிய பார்வை - ஒலிப்புத்தகம் திறக்கும் உன்னத சாளரங்கள்

புத்தகம் படிக்கவெல்லாம் எங்கே சார் எனக்கு நேரமிருக்கு?'' என்று அங்கலாய்த்துக் கொள்பவர்கள் அநேகம் பேர். காலை எழுந்தால் நடைபயிற்சி, பெண்ணாக இருந்தால் சமையல் வேலை, வீட்டு வேலைகள் மற்றும் அலுவலகத்திற்கு காரில் பயணம், வீட்டிற்கு வரும் நண்பர்கள், விருந்தினர்களுடன் பொழுது கழிப்புகள். மேற் சொன்ன எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் இந்த ஒலிப்புத்தகத்தை நீங்கள் படிக்க முடியும். நியூ ஹரிசான் மீடியாவின் முப்பெரும் பிரிவுகளான கிழக்கு, வரம், நலம் ஆகியவை இந்த ஒலிப்புத்தகங்களைத் தயாரித்து வெளியிடுகின்றன.

பொதுவாக ஒரு புத்தகத்தை ஒருவர் மட்டுமே படிக்கமுடியும். ஆனால் இந்த ஒலிப்புத்தகத்தின் வழியே ஒரே நேரத்தில் பல பேர் கொண்ட குழு ஒரு நாவலையோ, ஒரு வாழ்க்கை வரலாற்றையோ அறிந்து பயன்பெற முடியும் என்பதே இதன் சிறப்பு.

கிழக்கு பதிப்பகத்தின் மல்டி மீடியா தயாரிப்புத் துறையைச் சேர்ந்த வைதேகி சங்கரன் இதுகுறித்து பேசுகையில், தாய் மொழியாகிய தமிழை அறியாதவர்களுக்கு நல்ல புத்தகங்களைப் படித்துத் தெரிந்துகொள்ள முடியவில்லையே என்ற இருக்கும் அவர்களுக்கு இந்த ஒலிப்புத்தகம் ஒரு பேருதவியாக இருக்கும். மிகச்சிறந்த நாவல்கள், சுகாதாரம், ஆன்மிகம், வரலாறு, சுயமுன்னேற்றம் ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த நல்ல புத்தகங்களை ஒலி வடிவில் தயாரித்து, எல்லோரும் வாங்கும் அளவிலான சாதாரண விலைக்குத் தருகிறோம். கண் தெரியாதவர்கள் கூட இந்த ஒலிப்புத்தகத்தின் மூலம் நல்ல நாவலையோ, ஒரு வரலாற்று நூலையோ, சுயமுன்னேற்றக் கருத்துகளையோ அறிந்துகொள்ள முடியும். நீண்ட தூரம் காரில் பயணம் செய்யும் நாட்களில் இந்த ஒலிப்புத்தகங்கள் பெரும்பயன் கொடுக்கும். சென்னையில் நடந்த கடந்த புத்தகக் கண்காட்சியில் இந்த ஒலிப்புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.''

பொதுவாக நாம் புத்தகங்களை வாசிக்கையில் எழுத்தாளரின் மன அலைவலிசையோடு சிலசமயம் ஒன்ற முடியாமல் போய்விடும். அந்தக் குறைபாடுகள் இந்த ஒலிப்புத்தகங்களில் நிகழ வாய்ப்பில்லை'' என்று சொல்லும் பா. ராகவன் (தலைமை எடிட்டர்) அதன் காரணங்களை அழகாக விவரிக்கிறார்.

நூலில் இடம் பெற்றிருக்கும் கருத்துகள், உரையாடல்களுக்கு ஏற்ப இந்த ஒலிப்புத்தகத்தில் குரல் ஏற்ற இறக்கங்களுடன் அமைந்து ஒலிக்கின்றன. சூழலின் தன்மைக்கேற்ப பின்னணி இசைக்கோர்ப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளதால் மேன்மையான மன லயத்துடன் கூடிய ஒத்திசைவு இயல்பாக அமைந்துவிடுகிறது. இருபது வயதைக் கடந்த அனைவருக்கும் இன்றைய சூழலில் ஆங்கிலம் பிழைப்பு மொழியாகிவிட்டது. பாகுபாடின்றி அனைவரும் ஆங்கில வழிக்கல்வி படித்து வருகிறார்கள். காலச் சூழலில் தமிழ் பேச்சுமொழியாக மாறும் அபாயம் நிகழ வாய்ப்புள்ளது. தமிழ் படைப்புலகம் கேள்விக்குள்ளாகும் நிலையைத் தடுக்கவே இந்த ஒலிப்புத்தகம். தமிழின் மேல் ஆர்வம் ஏற்படச் செய்வதற்கு இது ஒரு சிறந்த வழி. தொலைக்காட்சி, இண்டர்நெட், சினிமா என்று இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய பரபரப்பான சூழலில் ஊடகங்கள் அறிவுப்பூர்வமாக எதையும் செய்யத் தயாராக இல்லை. அந்நிலையிலிருந்து வேறுபட்டு நாங்கள் அம்பானி, இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி, பிடல் காஸ்ட்ரோ என்று சாதனையாளர்கள் மற்றும் சரித்திர நாயகர்கள் வாழ்க்கை வரலாறுகளையும் இரவுக்கு முன்பு வருவது மாலை எனும் ஆதவன் குறுநாவல் போன்றவற்றையும் சிறந்த சுயமுன்னேற்ற நூல்களையும் ஒலிப்புத்தகங்களாக உருவாக்கி உள்ளோம். இதுவரையில் இருபத்திநான்கு ஒலிப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வருட முடிவிற்குள் இது நூறாக உயரும்.''

கற்றலினும் கேட்டல் நன்று' என்னும் முதுமொழியை புது மொழியாக்குகிறது நியூ ஹாரிசன் மீடியா.

Labels: , ,

Dinamani May 30 - புதிய வாசகர்களை உருவாக்கும் 'ஒலிப் புத்தகம்'

குங்குமம் - "புத்தகம் பேசுது" - ஸ்ரீதேவி

சத்யஜித் ரே : The Adventures of Feluda : தமிழில் ஒரு புதிய முயற்சி!

உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட மேதை சத்யஜித்ரேவை ஓர் எழுத்தாளராகத் தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகப்படுத்துகிறது. துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து பல புதிய சாத்தியங்களை உருவாக்கியவர் சத்யஜித் ரே. 1965 தொடங்கி 1992 வரை சத்யஜித் ரே எழுதிய கதைகள் பெங்காலியிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. முதல் முறையாக, சத்யஜித் ரேயின் படைப்புகள் காலவரிசைப்படுத்தப்பட்டு, தமிழில் வெளிவருகின்றன.

Labels: ,

கிழக்கு வழங்கும் செம்பதிப்புகள்

வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இலக்கிய படைப்புகள் அனைத்தையும் கிழக்கு தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், நான்கு முக்கிய தொகுப்புகள் அழகிய வடிவில் செம்பதிப்பாக சமீபத்தில் வெளிவந்துள்ளன. தேவனின் துப்பறியும் சாம்பு முழுமையான தொகுப்பு. ஆதவனின் சிறுகதைகள் அனைத்தும் சேர்ந்த ஒரு தொகுப்பு. சுப்ரமணிய ராஜுவின் சிறுகதைகள். தமிழின் நிகழ்கால நம்பிக்கைகளுள் ஒருவரான இரா. முருகனின் கதைகள்.

கட்டுரைகள் வரிசையில், அசோகமித்திரனின் இருபெரும் கட்டுரைத் தொகுப்புகள் முக்கியமானவை. முதல் தொகுப்பில், அசோகமித்திரனின் அனுபவங்களும் அபிப்பிராயங்களும் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது தொகுப்பில் கலைகளும் கலைஞர்களும்.

விரைவில், இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்கள் அனைத்தும் ஒரே தொகுப்பில் கிடைக்கும்.

Labels: ,

தீவிரவாதம் - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்

தீவிரவாதிகள் எப்படி உருவாகிறார்கள்? உலகின் எல்லா பகுதிகளிலும் எப்படி அவர்காளால் நீக்கமற நிறைந்திருக்க முடிகிறது? அவர்கள் கோரிக்கை என்ன? கோட்பாடு என்ன? எப்படி ஆள்கள் சேர்க்கிறார்கள்? எப்படி ஆயுதங்கள் சேரிக்கிறார்கள்? அவர்கள்து ரகசிய நெட்வொர்க் எப்படி இயங்குகிறது?

தீவிரவாத இயக்கங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் பா. ராகவனின் சமீபத்திய முக்கிய நூல்கள் இவை. ஐ.எஸ்.ஐ : நிழல் அரசின் நிஜ முகம். லஷ்கர்-ஏ-தொய்பா, ஜமா இஸ்லாமியா, ஓம் ஷின்ரிக்கியோ.

உல்ஃபா பற்றிய ஓர் அடிப்படை அறிமுகப் புத்தகம் விரைவில் வெளிவரவிருக்கிறது.

Labels: ,

முனீஸ்வரன் பூஜை - ஆசையாகச் செய்யப்படும் குலதெய்வ வழிபாடு

இதுவரை இல்லாத நூல்களை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம்... பெருமைப்படுகிறோம். அந்த வகையில் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற தேசங்களிலும் பரவியிருக்கிறது முனீஸ்வரன் வழிபாடு. அதற்கான ஒரு சிறந்த நூலாக அச்சாக இருக்கிறது இது.

மொட்டை போடுதல், காது குத்துதல், கறி சமைத்தல், சாராயத்தை நிவேதனமாகப் படைத்தல் என்று குடும்பத்தில் குதூகலத்தைக் கொண்டு வருகிறது இந்த வழிபாடு. பல வகையான முனீஸ்வரன் பற்றியும் விதவிதமான வழிபாடுகள் பற்றியும் விவரமாகச் சொல்ல வருகிறது இந்நூல்.

வீட்டில் முனீஸ்வர பூஜை நடத்த விருப்பப்படும் அன்பர்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமையும்.

Labels: ,

Wednesday, September 19, 2007

Announcing New Horizon Media's publishing programme in Malayalam - September 2007

Trivandrum, September 2007

This september New Horizon Media launched its Malayalam imprint - Pulari Prasidheekaranam. The launch of this imprint is the next logical step in our growth as a publisher. With this unprecedented initiative we hope to reach a whole new readership.

Labels: ,

Jayakanthan's 1960s bestseller translated.

Jayakanthan's 1960s bestseller, Rishi Moolam and Aadum Naarkaaligal Aadugindrana, has been translated into English by K S Subramanian and published by Indian Writing, an imprint of New Horizon Media.

The eeriness of Jayakanthan's two novellas in this volume is overwhelming and disturbing. The protagonists are helpless victims of psychological maladies. Their suppressed libido and oedipus complex are areas Tamil writers generally dared not enter at any rate in the 1960s, when they were written.

The success of Jayakanthan lies in evoking in the reader a profound empathy with the tragically deviant characters of the two stories.

Price: 150/Pages: 144/ISBN No.: 978-81-8368-382-1

Labels: ,

Indian Writing participates in the 2007 Bangalore Book Fair

Indian Writing, an imprint of New Horizon Media publishes translations from Indian languages into English, their first venture being from Tamil to English.

The imprint was launched on 15 June 2007. It has so far published 12 titles, which includes major tamil writers like Indira Parthasarathy, Jayakanthan, Ashokamitran, Adhavan, Sivasankari and Vaasanthi literary figures world. It aims to bring out 30 titles by the 2008 Chennai book fair.

Labels: ,

Oxygen Books announces the launch of Trees and Tree Tales: Some Common Trees of Chennai by Prof K N Rao

Prof K N Rao is a distinguished Botany Professor who has authored several textbooks for college students. He is also the author of several short stories in Telugu published in prestigious Telugu periodicals and a thought-provoking book in English called Voices of Human Civilization.

Trees and Tree Tales: Some Common Trees of Chennai has been written to arouse the readers' interest in the trees of Chennai, which they see but do not notice. The book covers indigenous species such as the banyan and peepul and exotics such as the baobab. Besides the profiles of trees, Prof K N Rao gives the legends connected with them and peppers the narrative with real life incidents.

Labels: ,

Tuesday, September 18, 2007

வாரம்தோறும் வரம் வெளியீட்டின் சொற்பொழிவு

வித்தியாசமான ஐடியாவாக இந்தச் சொற்பொழிவு பற்றி யோசித்தோம்... அதாவது நமது வரம் வெளியீட்டு புத்தகத் தலைப்பை வைத்துக்கொண்டு வாராவாரம் வெவ்வேறு தலைப்புகளில் பிரபல உபன்யாசகர்கள் உரை நிகழ்த்துவதென்று.

அதன்படி 13 வாரங்கள் வெகு விமரிசையாக 'சூடான சொற்பொழிவு; சுவையான பிரசாதம்' என்று இதை அரங்கேற்றினோம்.

இதன் மேலான வரவேற்பு எங்களை அடுத்த கட்டத்துக்கு யோசிக்க வைத்திருக்கிறது. தமிழகம் முழுக்க இந்த மாதிரியான சொற்பொழிவு நடத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். நடந்து முடிந்த சொற்பொழிவுகளை ஒலித் தட்டுக்களாக்கி இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

Labels: ,

கூவாகம் கூத்தாண்டவர்- அரவாணிகளின் திருத்தலம்

புரிந்துகொள்ளப்படாதவர்களின் புண்ணிய பூமி- கூவாகம். இந்தக் கோயில் திருவிழாவின்போது இந்தியாவெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான அரவாணிகள் எனப்படும் திருநங்கைகள் இங்கே கூடிவிடுகிறார்கள்.

இவர்களைப் பற்றியும் இவர்களின் இஷ்ட தெய்வமான அரவாண் பற்றியும் அந்தத் திருவிழாவின்போது நடக்கும் 'தாலி அறுப்பு' போன்ற உருக்கமான வழிபாடுகள் பற்றியும் மிக விரிவாக மிகத் தெளிவாக மிக எளிமையாக விளக்க வருகிறது இந்நூல். தமிழில் இம்மாதிரியான நூல் வருவது இதுவே முதல்.

Labels: ,

Newindianexpress June 04 - The reading session was conducted by theatre group

Indian_express May 30 - Anglicising vernacular writing