﻿<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD XHTML 1.1 plus MathML 2.0//EN"
 "http://www.w3.org/Math/DTD/mathml2/xhtml-math11-f.dtd">
<html xmlns="http://www.w3.org/1999/xhtml"
>
<head>
<meta http-equiv="content-type"
 content="application/xhtml+xml; charset=UTF-8" />
<title>இருபடிச் சமன்பாடுகள்</title>
</head>

<body><p><h1>இருபடிச் சமன்பாடுகள்</h1></p>
<p>பலபடிச் சமன்பாடுகளைப் பற்றிப் பேசத் தொடங்கினோம். <math 
xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>x</mi>
</math> என்பது ஒரு மாறி (variable) என்றால், அதன் வர்க்கம், கனம், நான்காம் படி ஆகியவற்றை <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<msup>
<mi>x</mi>
<mn>2</mn>
</msup>
<mo>,</mo>
</math><math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<msup>
<mi>x</mi>
<mn>3</mn>
</msup>
</math>, <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<msup>
<mi>x</mi>
<mn>4</mn>
</msup>
</math> என்று எழுதலாம். இந்தப் படிகளை வெவ்வேறு எண்களால் பெருக்கி, இவற்றையெல்லாம் கூட்டினால் நமக்குக் கிடைப்பது அந்த மாறி <math 
xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>x</mi>
</math>-ன் சார்பு (function). இந்தச் சார்புக்கு <math 
xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>n</mi>
</math> வரிசை கொண்ட பலபடிச் சார்பு (polynomial function) என்று பெயர். இப்படிக் கிடைக்கும் பலபடிச் சார்பை சுழியத்துக்கு (Zero) சமப்படுத்தினால் கிடைப்பது <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>n</mi>
</math> வரிசையுடைய பலபடிச் சமன்பாடு.</p>

<p><math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<msub>
<mi>a</mi>
<mn>0</mn>
</msub>
<mo>+</mo>
<msub>
<mi>a</mi>
<mn>1</mn>
</msub>
<mi>x</mi>
<mo>+</mo>
<msub>
<mi>a</mi>
<mn>2</mn>
</msub>
<msup>
<mi>x</mi>
<mn>2</mn>
</msup>
<mo>+</mo>
<msub>
<mi>a</mi>
<mn>3</mn>
</msub>
<msup>
<mi>x</mi>
<mn>3</mn>
</msup>
<mo>+</mo>
<mo>.</mo>
<mo>.</mo>
<mo>.</mo>
<mo>+</mo>
<msub>
<mi>a</mi>
<mi>n</mi>
</msub>
<msup>
<mi>x</mi>
<mi>n</mi>
</msup>
<mo>=</mo>
<mn>0</mn>

</math></p>

<p>இந்தச் சமன்பாட்டில் <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>n</mi>
<mo>=</mo>
<mn>1</mn>
</math> என்றால் நமக்குக் கிடைப்பது மிக எளிதான ‘ஒருபடிச் சமன்பாடு'.</p>

<p><math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<msub>
<mi>a</mi>
<mn>0</mn>
</msub>
<mo>+</mo>
<msub>
<mi>a</mi>
<mn>1</mn>
</msub>
<mi>x</mi>
<mo>=</mo>
<mn>0</mn>
</math></p>

<p>இந்தச் சமன்பாட்டுக்கு மிக எளிதான விடை உள்ளது.</p>

<p><math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>x</mi>
<mo>=</mo>
<mo>−</mo>
<mfrac>
<msub>
<mi>a</mi>
<mn>0</mn>
</msub>
<msub>
<mi>a</mi>
<mn>1</mn>
</msub>
</mfrac>
<mo>,</mo>

<msub>
<mi>a</mi>
<mn>1</mn>
</msub>
<mo>≠</mo>
<mn>0</mn>
 
</math></p>

<p>ஒருபடிச் சமன்பாட்டுக்கு அடுத்தது, இருபடிச் சமன்பாடு (quadratic equation).</p>

<p><math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<msub>
<mi>a</mi>
<mn>0</mn>
</msub>
<mo>+</mo>
<msub>
<mi>a</mi>
<mn>1</mn>
</msub>
<mi>x</mi>
<mo>+</mo>
<msub>
<mi>a</mi>
<mn>2</mn>
</msub>
<msup>
<mi>x</mi>
<mn>2</mn>
</msup>
<mo>=</mo>
<mn>0</mn>
 
</math></p>

<p>பொதுவாக கணிதப் புத்தகங்களில் இந்தச் சமன்பாட்டை இப்படி எழுதியிருப்பார்கள்:</p>

<p><math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>a</mi>
<msup>
<mi>x</mi>
<mn>2</mn>
</msup>
<mo>+</mo>
<mi>b</mi>
<mi>x</mi>
<mo>+</mo>
<mi>c</mi>
<mo>=</mo>
<mn>0</mn>
<mtext></mtext>
</math></p>

<p>இரண்டுமே ஒன்றுதான். இரண்டிலும் கெழுக்கள் (co-efficients - <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<msup>
<mi>x</mi>
<mi>n</mi>
</msup>
</math>-க்கு முன் இருக்கும் <math
 xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<msub>
<mi>a</mi>
<mi>n</mi>
</msub>
</math>) வேறு குறியீடுகளால் குறிக்கப்படுகின்றன. <math
 xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>n</mi>
</math> வரிசையுள்ள ஒரு பலபடிச் சமன்பாட்டுக்கு <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>n</mi>
</math> விடைகள் உள்ளன என்று நிரூபிக்கலாம். அதாவது, இருபடிச் சமன்பாட்டுக்கு இரண்டு விடைகள்.  அப்படியென்றால் என்ன அர்த்தம்? <math 
xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>x</mi>
</math> என்னும் மாறி எந்த மதிப்பையும் எடுத்துக்கொள்ளலாம் என்று பார்த்தோம். <math 
xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>x</mi>

</math> எந்த மதிப்பை எடுத்துக்கொண்டாலும், இடதுபக்கம் உள்ள பலபடிச் சார்பு, சுழியமாகுமா? ஆகாது. <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>x</mi>
</math>, குறிப்பிட்ட இரண்டு மதிப்பை எடுக்கும்போதுதான் இருபடிச் சார்பு, சுழியம் என்னும் மதிப்பைப் பெறும். <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>x</mi>
</math> பிற மதிப்புகளை எடுத்துக்கொள்ளும்போது இருபடிச் சார்பின் மதிப்பு சுழியமாக இல்லாமல் வேறு மதிப்புகளைப் பெறும். மேலே குறிப்பிட்ட இருபடிச் சார்பு, <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>x</mi>
</math> என்ற மாறி, <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>p</mi>
</math>, <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>q</mi>
</math> ஆகிய மதிப்புகளைப் பெறும்போது சுழியமாகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால்,</p>

<p><math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mo>(</mo>
<mi>x</mi>
<mo>−</mo>
<mi>p</mi>
<mo>)</mo>
<mo>(</mo>
<mi>x</mi>
<mo>−</mo>
<mi>q</mi>
<mo>)</mo>
<mo>=</mo>
<mn>0</mn>
</math></p>

<p>அல்லது, <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<msup>
<mi>x</mi>
<mn>2</mn>
</msup>
<mo>−</mo>
<mo>(</mo>
<mi>p</mi>
<mo>+</mo>
<mi>q</mi>
<mo>)</mo>
<mi>x</mi>
<mo>+</mo>
<mi>p</mi>
<mi>q</mi>
<mo>=</mo>
<mn>0</mn>
</math></p>

<p>மேலே உள்ள சமன்பாட்டை முதலில் எழுதிய இருபடிச் சமன்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நாம் இவ்வாறு சொல்லமுடியும்:</p>

<p><math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>p</mi>
<mo>+</mo>
<mi>q</mi>
<mo>=</mo>
<mo>−</mo>
<mfrac>
<mi>b</mi>
<mi>a</mi>
</mfrac>
</math></p>

<p><math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>p</mi>
<mi>q</mi>
<mo>=</mo>
<mfrac>
<mi>c</mi>
<mi>a</mi>
</mfrac>
</math></p>

<p>இந்த இரண்டு சமன்பாடுகளையும் கொண்டு, <math 
xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>p</mi>
</math>, <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>q</mi>
</math> ஆகியவற்றை <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>a</mi>
</math>, <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>b</mi>
</math>, <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>c</mi>
</math> ஆகியவை மூலம் கொடுக்கமுடியும்.</p>

<p><math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<msup>
<mrow>
<mo>(</mo>
<mi>p</mi>
<mo>+</mo>
<mi>q</mi>
<mo>)</mo>
</mrow>
<mn>2</mn>
</msup>
<mo>=</mo>
<msup>
<mi>p</mi>
<mn>2</mn>
</msup>
<mo>+</mo>
<msup>
<mi>q</mi>
<mn>2</mn>
</msup>
<mo>+</mo>
<mn>2</mn>
<mi>p</mi>
<mi>q</mi>
</math></p>

<p><math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<msup>
<mrow>
<mo>(</mo>
<mi>p</mi>
<mo>−</mo>
<mi>q</mi>
<mo>)</mo>
</mrow>
<mn>2</mn>
</msup>
<mo>=</mo>
<msup>
<mi>p</mi>
<mn>2</mn>
</msup>
<mo>+</mo>
<msup>
<mi>q</mi>
<mn>2</mn>
</msup>
<mo>−</mo>
<mn>2</mn>
<mi>p</mi>
<mi>q</mi>
</math></p>

<p><math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<msup>
<mrow>
<mo>(</mo>
<mi>p</mi>
<mo>−</mo>
<mi>q</mi>
<mo>)</mo>
</mrow>
<mn>2</mn>
</msup>
<mo>=</mo>
<msup>
<mrow>
<mo>(</mo>
<mi>p</mi>
<mo>+</mo>
<mi>q</mi>
<mo>)</mo>
</mrow>
<mn>2</mn>
</msup>
<mo>−</mo>
<mn>4</mn>
<mi>p</mi>
<mi>q</mi>
<mo>=</mo>
<mfrac>
<mrow>
<msup>
<mi>b</mi>
<mn>2</mn>
</msup>
<mo>−</mo>
<mn>4</mn>
<mi>a</mi>
<mi>c</mi>
</mrow>
<msup>
<mi>a</mi>
<mn>2</mn>
</msup>
</mfrac>
</math></p>

<p>இரண்டு பக்கத்துக்கும் வர்க்கமூலம் எடுத்தால், கிடைப்பது:</p>

<p><math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>p</mi>
<mo>−</mo>
<mi>q</mi>
<mo>=</mo>
<mfrac>
<msqrt>
<msup>
<mi>b</mi>
<mn>2</mn>
</msup>
<mo>−</mo>
<mn>4</mn>
<mi>a</mi>
<mi>c</mi>
</msqrt>
<mi>a</mi>
</mfrac>
</math></p>

<p>இப்போது, <math 
xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>p</mi>
</math>, <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>q</mi>
</math> ஆகியவற்றைப் பெறலாம்:</p>

<p><math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>p</mi>
<mo>=</mo>
<mfrac>
<mrow>
<mo>(</mo>
<mi>p</mi>
<mo>+</mo>
<mi>q</mi>
<mo>)</mo>
<mo>+</mo>
<mo>(</mo>
<mi>p</mi>
<mo>−</mo>
<mi>q</mi>
<mo>)</mo>
</mrow>
<mn>2</mn>
</mfrac>
<mo>=</mo>
<mfrac>
<mrow>
<mo>−</mo>
<mi>b</mi>
<mo>+</mo>
<msqrt>
<msup>
<mi>b</mi>
<mn>2</mn>
</msup>
<mo>−</mo>
<mn>4</mn>
<mi>a</mi>
<mi>c</mi>
</msqrt>
</mrow>
<mrow>
<mn>2</mn>
<mi>a</mi>
</mrow>
</mfrac>
</math></p>

<p><math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mi>q</mi>
<mo>=</mo>
<mfrac>
<mrow>
<mo>(</mo>
<mi>p</mi>
<mo>+</mo>
<mi>q</mi>
<mo>)</mo>
<mo>−</mo>
<mo>(</mo>
<mi>p</mi>
<mo>−</mo>
<mi>q</mi>
<mo>)</mo>
</mrow>
<mn>2</mn>
</mfrac>
<mo>=</mo>
<mfrac>
<mrow>
<mo>−</mo>
<mi>b</mi>
<mo>−</mo>
<msqrt>
<msup>
<mi>b</mi>
<mn>2</mn>
</msup>
<mo>−</mo>
<mn>4</mn>
<mi>a</mi>
<mi>c</mi>
</msqrt>
</mrow>
<mrow>
<mn>2</mn>
<mi>a</mi>
</mrow>
</mfrac>
</math></p>

<p>பள்ளிக்கூடத்தில் கணிதம் படிக்கும்போது இவற்றைப் பார்த்த ஞாபகம் வருகிறதா? இந்தத் தீர்வை பல இடங்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவோம். 
ஒரு பலபடிச் சமன்பாட்டின் விடைகள், அந்தச் சமன்பாட்டின் மூலங்கள் எனப்படும்.</p>

<p>இப்போது விகிதமுறா எண்களுக்கு (irrational numbers) மீண்டும் வருவோம். எல்லா விகிதமுறா எண்களையும் பலபடிச் சமன்பாடுகளின் மூலங்களாகப் பார்க்கமுடியும். இந்தச் சமன்பாட்டின் கெழுக்கள் (co-efficients) விகிதமுறும் எண்களாக இருந்தாலும்கூட, மூலங்கள் விகிதமுறா எண்களாக வரும். உதாரணத்துக்கு <math 
xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<msqrt>
<mn>2</mn>
</msqrt>
</math> என்பது <math 
xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<msup>
<mi>x</mi>
<mn>2</mn>
</msup>
<mo>−</mo>
<mn>2</mn>
<mo>=</mo>
<mn>0</mn>
</math> என்னும் இருபடிச் சமன்பாட்டின் ஒரு மூலமாகும். மற்றொரு மூலம் <math 
xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<mo>−</mo>
<msqrt>
<mn>2</mn>
</msqrt>
</math>.</p>

<p>இப்போது மொத்தம் மூன்றுவிதமான எண்கள் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஒன்று முழு எண்கள். இரண்டு விகிதமுறு எண்கள் (பின்னங்கள்). மூன்றாவதாக பலபடிச் சமன்பாடுகளின் மூலங்களான விகிதமுறா எண்கள்.</p>

<p>ஆனால் உண்மை அதுவன்று! இந்த எண்களுக்குள் சிக்காத பல எண்கள் உள்ளன. அப்படிப்பட்ட எண்களில் இரண்டு மிகவும் சுவாரசியமான எண்களை நாளை பார்ப்போம்!</p>
<script src="http://www.google-analytics.com/urchin.js" type="text/javascript">
</script>
<script type="text/javascript">
_uacct = "UA-255089-6";
urchinTracker();
</script></body>
</html>
